மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கறம்பக்குடியில் கடந்த வெள்ளி அன்று ( 25. 11. 16 ) புதுக்கோட்டை மாவட்ட டிசம்பர்-6 சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது ஜான், முஹம்மது ஹாரிஸ் மற்றும் அறந்தாங்கி முபாரக், அஜ்மீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: மஜக ஊடகபிரிவு புதுக்கோட்டை மாவட்டம்.
Author: admin
விருதுநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் – பொருளாளர் ஹாரூன் ரஷீது உரை !
கும்பகோணம் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மஜக அவைத்தலைவர் பங்கேற்பு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #குடந்தையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் #நாசர்_உமரி பங்கேற்று உரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். ஆண்கள், பெண்கள் என எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்: மஜக ஊடகப்_பிரிவு தஞ்சை வடக்கு மாவட்டம்.
VP சிங்கை மறக்க மாட்டோம்!
நேருவுக்கு பின்னால் இந்தியாவின் அடித்தட்டு மக்களை பற்றி கவலைப்பட்ட ஒரே பிரதமர், சமூக நீதி காவலர் V.P சிங் அவர்கள். இன்று நவம்பர் 26 அவர் இவ்வுலகிலிருந்து விடைபெற்ற நாள்? யார் யாரையோ கொண்டாடும் இந்திய ஊடகங்கள் அவரை முடிந்த மட்டும், இருட்டடிப்பு செய்வதில் உறுதியாக இருக்கின்றன. அவர் மரணம் அடைந்தபோது, அதை பெட்டி செய்தியாக வெளியிட்டனர். அதே காலக்கட்டத்தில் தேவ் ஆனந்த் என்ற இந்தி நடிகரின் மரணத்திற்கு தலையங்கம் தீட்டினார்கள். ஏன் இவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு? அவர்தான் 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கொண்டு வந்தார். மண்டல் கமிஷனை உறுதியாக அமல்படுத்தினார். பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு தடையாக இருந்தார். காவிரி விவகாரத்தில் தீர்வு காண ' காவிரி நடுவர் மன்றத்தை ' சமரசமின்றி அமைத்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார். மண்டல் கமிஷனை அமுல்படுத்திய ஒரே காரணத்திற்காக தனது பிரதமர் பதவியை இழந்தார். பதவியை இழந்த பிறகும் குடிசை வாழ் மக்களுக்காக போராடினார். பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தண்ணீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அதுவே அவரது கிட்னி செயலிழப்பதற்கு காரணமாக அமைந்தது! தமிழக மக்களின் மீது பேரண்பை காட்டிய அந்த சமூக
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டம்.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை *செயற்குழு கூட்டம்* இன்று 25/11/2016 வெள்ளிக்கிழமை முர்காப் ராஜ்தானி உணவகம் அரங்கில் மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல ஊடக செயலாளர் *அதிரை.அப்துல் சமது* தொகுத்து வழங்க சகோ. *ஏனங்குடி சாதிக்* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல து. செயலாளர் சகோ. *நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான்* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. *இளையான்குடி சீனி முகம்மது* அவர்கள் *மஜகவின் செயல்பாடு மற்றும் நிகழ்கால நிகல்வுகள்* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல து. செயலாளர் சகோ. *ஏனங்குடி முகம்மது பாஸில்* அவர்கள் *மஜகவின் மேல் அரசியல் காழ்புணர்ச்சி* என்ற தலைப்பில் பேசினார் இதனை அடுத்து மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் *சமூக நீதி மாநாட்டின் செயல்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள்* பற்றி விளக்கினார், மண்டல பொருளாளர் சகோ. *நீடூர் முகம்மது நபிஸ்* அவர்கள் *மாநாட்டிற்கான பொருளாதாரம் குறித்து* பேசினார், மண்டல து. செயலாளர் சகோ. *அதிரை முகம்மது பைசல்* அவர்கள் *தொண்டரணியின் செயல்பாடு* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல ஆலோசகர்