நேருவுக்கு பின்னால் இந்தியாவின் அடித்தட்டு மக்களை பற்றி கவலைப்பட்ட ஒரே பிரதமர், சமூக நீதி காவலர் V.P சிங் அவர்கள்.
இன்று நவம்பர் 26 அவர் இவ்வுலகிலிருந்து விடைபெற்ற நாள்?
யார் யாரையோ கொண்டாடும் இந்திய ஊடகங்கள் அவரை முடிந்த மட்டும், இருட்டடிப்பு செய்வதில் உறுதியாக இருக்கின்றன.
அவர் மரணம் அடைந்தபோது, அதை பெட்டி செய்தியாக வெளியிட்டனர். அதே காலக்கட்டத்தில்
தேவ் ஆனந்த் என்ற இந்தி நடிகரின் மரணத்திற்கு தலையங்கம் தீட்டினார்கள்.
ஏன் இவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு?
அவர்தான் 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கொண்டு வந்தார். மண்டல் கமிஷனை உறுதியாக அமல்படுத்தினார்.
பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு தடையாக இருந்தார். காவிரி விவகாரத்தில் தீர்வு காண ‘ காவிரி நடுவர் மன்றத்தை ‘ சமரசமின்றி அமைத்தார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார்.
மண்டல் கமிஷனை அமுல்படுத்திய ஒரே காரணத்திற்காக தனது பிரதமர் பதவியை இழந்தார்.
பதவியை இழந்த பிறகும் குடிசை வாழ் மக்களுக்காக போராடினார். பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தண்ணீர் கூட அருந்தாமல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
அதுவே அவரது கிட்னி செயலிழப்பதற்கு காரணமாக அமைந்தது!
தமிழக மக்களின் மீது பேரண்பை காட்டிய அந்த சமூக நீதி போராளியை நாம் நினைவூட்டிக் கொண்டே இருப்போம்!
#தியாகிகளை_மறப்பது #மக்களின்_இயல்பு!
#தியாகத்தை #நினைவூட்டுவது_நமது #கடமை!
இவண்
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
26.11.12