குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு கூட்டம்.

image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை *செயற்குழு கூட்டம்* இன்று 25/11/2016 வெள்ளிக்கிழமை முர்காப் ராஜ்தானி உணவகம் அரங்கில் மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல ஊடக செயலாளர் *அதிரை.அப்துல் சமது* தொகுத்து வழங்க சகோ. *ஏனங்குடி சாதிக்* அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல து. செயலாளர்  சகோ. *நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான்* அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. *இளையான்குடி சீனி முகம்மது* அவர்கள் *மஜகவின் செயல்பாடு மற்றும் நிகழ்கால நிகல்வுகள்* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல து. செயலாளர் சகோ. *ஏனங்குடி முகம்மது பாஸில்* அவர்கள் *மஜகவின் மேல் அரசியல் காழ்புணர்ச்சி* என்ற தலைப்பில் பேசினார் இதனை அடுத்து மண்டல செயலாளர் சகோ. *முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன்* அவர்கள் *சமூக நீதி மாநாட்டின் செயல்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள்* பற்றி விளக்கினார், மண்டல பொருளாளர் சகோ. *நீடூர் முகம்மது நபிஸ்* அவர்கள் *மாநாட்டிற்கான பொருளாதாரம் குறித்து* பேசினார், மண்டல து. செயலாளர் சகோ. *அதிரை முகம்மது பைசல்* அவர்கள் *தொண்டரணியின் செயல்பாடு* குறித்து விளக்கினார் தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. *முசாவுதீன்* அவர்கள் *மாநாட்டின் பணிகள் குறித்து ஆலோசனைகள்* வழங்கினார் இறுதியாக மாயவரம்.சபீர் அஹ்மது நன்றிகூற துஆவுடன் இனிதே முடிந்தது, இதில் *மனிதநேய சொந்தங்கள்* அனைவரும் கலந்து கொண்டனர்.

*மனிதநேய கலாச்சார பேரவை*
  மனிதநேய ஜனநாயக கட்சி
  ஊடக பிரிவு குவைத் மண்டலம்
  55278478 – 60338005 – 55260018.
  E-mail: kuwaitmjk@gmail.com