மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் 23/12/2016 அன்று குவைத்தில் நடைபெற இருக்கும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 22/12/2016 நள்ளிரவு 2 மணிளவில் சென்னை விமாண நிலையத்திலிருந்து பயனம் மேற்கொண்டார். அவரை துனை பொதுச்செயலாளர் ராவுத்தர் ஷா மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன்,மற்றும் நாச்சிகுளம் கிளை துனை செயலாளர் யாஸர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மஜக ஊடகப்பிரிவு சென்னை
Author: admin
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் நாகை MP, MLA பங்கேற்பு!
மத்திய அரசின் சார்பில் பொறியியல் துறை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் சிறப்பு திட்ட தொடக்க விழாவில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர். பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப கல்வியறிவை, நடைமுறைப் படுத்துவதற்கான 45 நாட்கள் சிறப்பு பயிற்சியை மத்திய அரசு நடத்தி, அதற்கு சர்வதேச தர சான்றிதழை வழங்குகிறது. தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே அதற்கு தேர்வாகின. அதில் நாகை EGS பிள்ளை பொறியியல் கல்லூரியும் ஒன்று. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
திருவாரூர் மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சிகள்! ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்!
நேற்று 19.12.2016 திருவாரூர் மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார். பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், பாலாக்குடி ஆகிய ஊர்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார். அத்திகடையில் IKP சார்பில் நடைபெறும் மதரஸாவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். பிறகு கூத்தாநல்லூரில் திரளான இளைஞர்கள் பொதுச்செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மேற்கண்ட ஊர்களில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சிகளிலும் பொதுச்செயலாளர் பங்கேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், பொருளாலர் ஜம் ஜம் சாகுல் மற்றும் கிளை நிர்வாகிகள் எழுச்சியோடு பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, திருவாரூர் மாவட்டம்.
கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்!
திராவிட முன்னேற்றக் கழக தலைவர், முன்னாள் முதல்வர் ஐயா, கலைஞர் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுவாச கோளாறு தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிகிறோம். அவர் உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 17.12.16
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது!
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்தித்து ஆறுதல்! வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ், இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது ஆகியோரும் உடன் சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வர்தா புயலால் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்து அங்கு நேரில் சென்ற பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையிலான மஜக குழு அகதிகள் முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பிறகு அங்குள்ள மக்களுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது. அந்த முகாமில் 950 குடும்பங்கள் வசிகின்றன என்பது குறிப்பிடதக்கது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாகவும் பொதுச்செயலாளர் உறுதியளித்தார். பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக