ஜன.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட தலைமையின் முக்கிய அறிவிப்பு... நாளை 20.1.17 வெள்ளிக் கிழமை காலை 10.00மணி முதல் 12.00மணி வரை ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி கோவை பெரிய கடைவீதி, ஜமேஷா தர்கா அருகில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. ஆகவே அனைத்து மாவட்ட, அணி நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 19_01_17
Author: admin
ஜன.20 மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா : கோவை மாவட்ட மஜக அழைப்பு…
ஜன.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட தலைமையின் முக்கிய அறிவிப்பு... நாளை 20.1.17 வெள்ளிக் கிழமை காலை 10.00மணி முதல் 12.00மணி வரை ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி கோவை பெரிய கடைவீதி, ஜமேஷா தர்கா அருகில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. ஆகவே அனைத்து மாவட்ட, அணி நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 19_01_17
கறம்பக்குடியில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்…
ஜன.19., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரியும் , பீட்டாவை தடைசெய்ய கோரியும் கையில் பதாகைகள் ஏந்தி பேரணி நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஜான் மற்றும் நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing) புதுகை மாவட்டம், 19_01_17
பெங்களூர் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர் இந்தியா…
ஜன.19., பெங்களூருவில் மாணவர் இந்தியா நெல்லை மேற்கு மாவடடச் செயலாளர் முகம்மது கான் தலைமையில் பெங்களூர் சென்ற ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும் பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மாணவர் போராட்டத்தில் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, பெங்களூர். 19_01_17
பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவுக்கு எதிராகவும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தில் மஜக…
ஜன.19., நெல்லை பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்யக் கோரியும் நடைபெறும் மாணவர்கள் போராட்டதிற்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.கலீலுல் ரஹ்மான், மாவட்ட பொருளாலர் எஸ்.சேக் இப்ராகிம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்... தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, நெல்லை கிழக்கு 19_01_17