ஜன.20., ஜல்லிக்கட்டுக்கு எதிராக மல்லுக்கட்டும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்கள் முன்னெடுக்கும் அறப்போர் அமைதி வழியில் வெல்லட்டும்! மாணவர்_இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆதரவு மேலும் பெருகட்டும்! பெரியார், அண்ணாவின் கனவுகளை வெல்லவும், தமிழ்நாட்டின் உரிமைகள் மலரவும், "மத்தியில் கூட்டாட்சி_மாநிலத்தில் சுயாட்சி" என்ற முழக்கம் ஓங்கவும் இப்போர்களம் வழிகாட்டட்டும்! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! எம் தமிழ் இனத்தின் போராட்டம் வாழ்க!வாழ்க!வாழ்க! இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21_01_16
Author: admin
மலேசியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…
ஜன.20., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பல நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்திய தூதரகத்துக்கு எதிரே மலேசிய வாழ் தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினார். நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்காக மலேசிய வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை போராட்ட குழுவினர் போராட்டத்தில் பங்கேற்கும் மாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்குள்ள போராட்ட காரர்கள் மத்தியில் உரையாற்றினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். கோலாலம்பூரில் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இப்போராட்டத்தில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ என்.முனியாண்டி, மலேசிய ஆஸ்ரமம் ஒருங்கிணைப்பு தலைவர் அன்பில் தர்மலிங்கம், பிரபல சமூக ஆர்வர்லர் பாத்திமா சஸ்னா,மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ்,மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) கோலாலம்பூர் நகர செயலாளர் ரஜபுதீன்,செயற்குழு உறுப்பினர் ஜாகிர் பிஸ்ட்ரோ,சமூக ஆர்வலர்கள்
புதுச்சேரியில் 3ஆவது நாளாக மாணவர்களுடன் மஜக…
காஞ்சி வடக்கு மாவட்டம் சின்னமலையில் நடந்த போராட்டத்தில் மாணவர் இந்தியா
ஜன.20., சின்னமலையில் மாணவர் இந்தியா காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் முஹைதீன் தலைமையில் ஏராளமான மாணவர்களுடன் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடைசெய்ய கோரியும் பதாகைகள் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மாணவர் போராட்டத்தில் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, காஞ்சி வடக்கு. 20_01_17
கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் தர்ணா போராட்டம் !
ஜன.20., கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் சங்கம்சார்பாக இன்று 20.1.17 காலை 10.00 மணியளவில் பெரியகடைவீதி ஜமேஷா தர்கா முன்பாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க செயலாளர் கோவை நாசர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக், வணிகர்சங்க பொருப்பாளர்கள் அக்பர், ஹாருண் மற்றும் ஜமேஷா பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், காஜா மற்றும் நகைகடை வியாரிகள் ஏராலமானோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING) கோவை மாநகர் மாவட்டம். 20.01.17