நாகை.அக்.04., நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்கல் கிராமத்திற்கு அருகில் மினி பஸ் ஒன்று நேற்று (03/10/2017) காலை விபத்துக்குள்ளாகி பலர் காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பேருந்து என்பதால் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். மேலும் பெரியவர்களும், பெண்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான எம்.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசூதீன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், MJTS மாவட்ட செயலாளர் தெத்தி ஆரிப், தகவல் தொழில்நுடப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ்.சுல்தான், நாகை ஒன்றிய செயலாளர் ஜாஹிர், நாகை நகர பொருளாளர் அஜீஸுர் ரஹ்மான், நாகை சட்டமன்ற அலுவலகச் செயலாளர் சம்பத், நாகை நகர நிர்வாகிகள் செமீர்தீன், அனாஃப், அனீஸ், அசார் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் மருத்துவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். ஒரு சில நபர்களை தவிர மற்ற அனைவருக்கும் லேசான காயங்கள் தான் ஏற்ப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நாளை டிஸ்சார்ஜ்
Author: admin
R.S.S ஊர்வலத்தை அமைச்சரே தொடங்கி வைப்பதா? தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கடும் கண்டனம்!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை) மதுரையில் எதிர்வரும் 8.10.17 அன்று R.S.S அமைப்பின் ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் தொடங்கி வைப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆட்சியின் போது Rss ஊர்வலத்துக்கு பலமுறை காவல்துறை அனுமதி மறுத்தது. அப்போது நீதிமன்றத்திற்கு சென்று, நீதிபதிகள் பல நிபந்தனைகளை விதித்தப் பிறகே RSS ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைத்தது. இந்நிலையில் அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் மாண்புமிகு எடப்படியார் ஆட்சியில், RSS ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் இன்றி அனுமதி வழங்கி இருப்பதும், அமைச்சர் செல்லூர்.ராஜ் அவர்கள் தொடங்கி வைப்பதும், அதிமுகவின் கொள்கைகளுக்கும், பொன்மனச் செம்மல் ஐயா MGR, சமூகநீதிக்காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா ஆகியோருக்கும் செய்யும் துரோகமாகும். தமிழ்நாடு அமைதிப் பூங்கா என பெயர் பெற்ற பூமி. இங்கே சாதி, மத வேற்றுமைகளை தாண்டி, தமிழர்கள் சமூக நீதியால் இணைக்கப்பட்டு அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து
PFI தலைவர்கள் மஜக மாநில பொருளாளருடன் சந்திப்பு..!
சென்னை.அக்.04.,மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு நேற்று (03.10.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக வருகிற 08.10.2017 அன்று சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ள "உரிமை முழக்க மாநாட்டில்" கலந்து கொள்வதற்கான சிறப்பு அழைப்பை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை சந்தித்து வழங்கினார்கள். இதில் மஜகவின் மாநில துணைச்செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ், தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தலைமையகம். 04.10.2017
மஜக தலைமையக அறிவிப்பு.
இந்தியாவின் அடையாளம் தாஜ்மஹால்!
(மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) தாஜ்மஹாலை " உ. பி. மாநிலத்தின் கலாச்சார பாரம்பர்யம்" என்ற பட்டியலிலிருந்து நீக்கி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார் பா ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத். மதவெறி; காவி வெறியாகி புகை மூட்டமாக தாஜ்மஹாலைச் சூழ்ந்திருக்கிறது. தாஜ்மஹாலை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி மதிக்கிறார்கள்; ரசிக்கிறார்கள். சிலருக்கு அது அன்பின் அழகு; சிலருக்கோ காதலின் அடையாளச் சின்னம் . சிலருக்கு கட்டிடக்கலை நாகரிகத்தின் உச்சபட்ச வடிவம்! சிலருக்கோ அது இந்தியாவின் சகோதரத்துவம்! மொத்தத்தில் அது ஏழு உலக அதிசயங்களில் ஒன்று! அது சர்வதேச அளவில் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாகவும் பேணப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையிடும் ஒரே சுற்றுலாத்தளம் தாஜ்மஹால்தான்! அதை சுற்றுலாப் பட்டியலிலிருந்து உ.பி., பா.ஜ.க. அரசு நீக்கியிருப்பது அவர்களின் நாணயமற்ற மதவெறி செயல்பாடு என்பதை நாடே அறிந்து விட்டது. வெளிநாடுகளிலிருந்து தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காகவே பலர் இந்தியாவிற்கு வருகின்றனர். பல நாட்டுத் தலைவர்கள் அரசியல் வருகை மேற்கொள்ளும்போது கூட, தாஜ்மஹாலைப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள்! இந்தியாவில் வேறு எந்த இடத்திற்கும் சர்வதேச அளவில்