பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நாகை எம்.எல்.ஏ சார்பில் சந்தித்து ஆறுதல்..!

image

image

நாகை.அக்.04., நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்கல் கிராமத்திற்கு அருகில் மினி பஸ் ஒன்று நேற்று (03/10/2017) காலை விபத்துக்குள்ளாகி பலர் காயமடைந்தனர்.

பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பேருந்து என்பதால் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். மேலும் பெரியவர்களும், பெண்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச்செயலாளருமான எம்.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி செய்யது ரியாசூதீன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், MJTS  மாவட்ட செயலாளர் தெத்தி ஆரிப், தகவல் தொழில்நுடப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ்.சுல்தான், நாகை ஒன்றிய செயலாளர் ஜாஹிர், நாகை நகர பொருளாளர் அஜீஸுர் ரஹ்மான், நாகை சட்டமன்ற அலுவலகச் செயலாளர் சம்பத், நாகை நகர நிர்வாகிகள் செமீர்தீன், அனாஃப், அனீஸ், அசார் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் மருத்துவர்களை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். ஒரு சில நபர்களை தவிர மற்ற அனைவருக்கும் லேசான காயங்கள் தான் ஏற்ப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் நாளை டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்கள் எனவும் மருத்துவர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ சார்பில் காயமைடைந்தவர்களுக்கு பழங்களும், உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#நாகை_தெற்கு_மாவட்டம்.
03/10/2017