You are here

PFI தலைவர்கள் மஜக மாநில பொருளாளருடன் சந்திப்பு..!

image

image

சென்னை.அக்.04.,மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்திற்கு நேற்று (03.10.2017) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது ஷேக் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் வருகை புரிந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக வருகிற 08.10.2017 அன்று சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ள “உரிமை முழக்க மாநாட்டில்” கலந்து  கொள்வதற்கான சிறப்பு அழைப்பை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை சந்தித்து வழங்கினார்கள்.

இதில் மஜகவின் மாநில துணைச்செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ், தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தலைமையகம்.
04.10.2017

Top