மார்ச் 09, நாகை மாவட்டம் துளசேந்திரபுரத்தில் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணியும், பொதுக் கூட்டமும் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்றன. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... 'இந்த போராட்டம் வட இந்தியாவில் முன்னெடுக்கப்படுவது போல, பல இன மக்களும் பங்கேற்கும் களமாக விரிவுப்படுத்தப்பட வேண்டும். டெல்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போராட்ட களம் அவ்வாறு தான் நடக்கிறது. பல இன மக்களும் பங்கேற்பதால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்ற பிறகும் மக்கள் எழுச்சியை நிலைகுலைய செய்ய முடியவில்லை. அதனால் தான் குறுக்கு வழியில் சங்பரிவார் ஆதரவு கூலிப்படையை வைத்து டெல்லியில் திட்டமிட்ட வன்முறையை நடத்தி உள்ளார்கள். கூலிப்படை வன்முறை கும்பல் பள்ளிவாசல்களைத் தாக்கியது. ஆனால், அன்று இரவு அங்குள்ள கோயிலை முஸ்லிம்கள் பாதுகாத்து இந்துக்களிடம் ஒப்படைத்துள்ளனர் . அது போல, அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பல இடங்களில் இந்துக்கள் அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர். துயரத்திலும், இவ்விரு சம்பவங்கள் நெகிழ்ச்சியை தருகின்றன. இது தான் உண்மையான இந்தியா என்பதை ஃபாஸிஸ்ட்டுகள் உணர வேண்டும். குடியுரிமை கறுப்பு சட்டங்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது. அஸ்ஸாமில்
Author: admin
மக்கள் விரோத கருப்பு சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என!! சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!! கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் பேச்சு!
கோவை: மார்ச்.09., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது இங்கு கூடியிருக்கும் கூட்டம் ஏதோ தங்கள் சமுதாய பிரச்சனைகளுக்காக கூடிய கூட்டமல்ல பாசிச வாதிகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கூடிய கூட்டம் என்றும், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக அரசு NRC.NPR. தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்கிற ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு தன்னார்வத்துடன் தொடர்ந்து உணவு உள்ளிட்ட தேவைகளை வழங்கி வருபவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் 7.3.2020 அன்று கோவையில் நடந்த முழு அடைப்பின் போது நோயாளிகள், வெளியூர் பயணிகள், உள்ளிட்ட ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கிய கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அமைப்பின் நிர்வாகி தாக்கப்பட்டவுடன் 10 நிமிடத்தில் அதை இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்
விழிப்புணர்வுக்காக குறும் படம் எடுத்த மாணவர்கள்.! முதமி முன் அன்சாரி MLA வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!
இளம் தலைமுறையினரிடம் சமூக அக்கறைகள் அதிகரித்து வருவதற்கு கீழ்கண்ட நிகழ்வு ஒரு உதாரணமாகும். தோப்புத்துறையை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் இணைந்து "மதம்". என்ற பெயரில் நல்லிணக்கம் மிக்க ஒரு குறும் படத்தையும், 'ஹெல்மெட்' என்ற பெயரில் விபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை எடுத்துள்ளனர். தோப்புதுறையைச் சேர்ந்த இளம் மாணவர்கள் Nishanth வினோத் ராஜ், ரிஸ்வான், துரை ராஜன், ஜெய பாலா, மீனாட்சி சுந்தரம், சுதர்ஷன், குமார், ராம், செல்வ குமார், அஜித், மாதவன் ஆகியோர் இணைந்து குறும்படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்த இப்படத்திற்கு Film Free Way என்ற youtube நிறுவனம் பதக்கங்களை அனுப்பி சிறப்பித்துள்ளது. நேற்று இந்த மாணவர்கள் மொத்தமாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இளம் வயதில் சமூக பொறுப்புணர்வுடன் குறும்படங்கள் எடுத்து சாதித்ததற்கு தன் வாழ்த்துக்களை கூறினார். இது போல விழிப்புணர்வுள்ள மனிதநேயமுள்ள கலை படைப்புகளை தொடர்ந்து செய்யுமாறும் இதற்கு எல்லா ஒத்துழைப்புகளையும் தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்தலிலும் கவனம் செலுத்துமாறும்
வரலாற்றின் புரட்சிகர பக்கங்களை உருவாக்கியவர்கள் பெண்கள்! கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில்! மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!
கோவை: மார்ச்.08., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது டில்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போன்று கோவையிலும் ஒரு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி, தொடர்ந்து நடத்தி கொண்டி ருக்கின்ற பெண்கள் மத்தியில் பேசுகின்ற பொழுது, வரலாற்றின் புரட்சிகர பக்கங்களை உருவாக்கியவர்கள் பெண்கள் அந்த அடிப்படையில் இந்த போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் பங்கேற்று தொடர்ந்து இந்த போராட்டத்தை வலிமைப்படுத்தி வருகின்றீர்கள் என பெண்களை பாராட்டி பேசினார், மேலும் கலவர சூழலை உருவாக்கும் முயற்சியில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த பாசிசவாதிகளுக்கு எதிராக அவர்களின் வழியில் அவர்களை வீழ்த்தி இணக்கமான சூழலை ஏற்படுத்திய கோவை அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளையும் பாராட்டிப் பேசினார். உடன் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 07-03-2020
மலேசியாவில் புத்தகம் வெளியீட்டு விழா..! மஜக மாநிலப் பொருளாளர் எஸ்எஸ்ஹாரூன் ரசீது பங்கேற்பு
மலேசியா.மார்ச்.08., மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் நாசீர் அலி உமரி அவர்கள் எழுதிய "வியர்வை உலரும் முன்" என்ற நூல் வெளியீட்டு விழா பள்ளியின் கீழ்தளத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினார். இந்நூலில் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள வேண்டிய, மரணம் வருவதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அழகிய முறையில் எளிய நடையில் எடுத்துக் கூறியுள்ளார். இவ்விழாவில் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்மது இக்பால், மௌலவி கம்பம் பீர் முஹம்மது, தீன் ஜுவல்லர்ஸ் குழுமம் சிராஜுதீன் மற்றும் ரஃபியுதீன், செய்யது ரெஸ்டாரண்ட் உரிமையாளர் டத்தோ ஜமருல் கான், மெட்ரோ செக்யூரிட்டி உரிமையாளர் அப்துல் காதிர், டத்தோ டாக்டர் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மலேசியா_மண்டலம் 07-03-2020