டெல்லி கலவரம்! கோயிலை முஸ்லிம்களும் முஸ்லிம்களை இந்துக்களும் காத்துள்ளனர்..! துளசேந்திர புரத்தில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு!

மார்ச் 09,

நாகை மாவட்டம் துளசேந்திரபுரத்தில் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணியும், பொதுக் கூட்டமும் நடைப்பெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்றன.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

‘இந்த போராட்டம் வட இந்தியாவில் முன்னெடுக்கப்படுவது போல, பல இன மக்களும் பங்கேற்கும் களமாக விரிவுப்படுத்தப்பட வேண்டும். டெல்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போராட்ட களம் அவ்வாறு தான் நடக்கிறது. பல இன மக்களும் பங்கேற்பதால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்ற பிறகும் மக்கள் எழுச்சியை நிலைகுலைய செய்ய முடியவில்லை.

அதனால் தான் குறுக்கு வழியில் சங்பரிவார் ஆதரவு கூலிப்படையை வைத்து டெல்லியில் திட்டமிட்ட வன்முறையை நடத்தி உள்ளார்கள்.

கூலிப்படை வன்முறை கும்பல் பள்ளிவாசல்களைத் தாக்கியது.

ஆனால், அன்று இரவு அங்குள்ள கோயிலை முஸ்லிம்கள் பாதுகாத்து இந்துக்களிடம் ஒப்படைத்துள்ளனர் .

அது போல, அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பல இடங்களில் இந்துக்கள் அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர்.

துயரத்திலும், இவ்விரு சம்பவங்கள் நெகிழ்ச்சியை தருகின்றன.

இது தான் உண்மையான இந்தியா என்பதை ஃபாஸிஸ்ட்டுகள் உணர வேண்டும்.

குடியுரிமை கறுப்பு சட்டங்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது.

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதையும், அஸ்ஸாம் மாநில பாஜக வினரே இதை எதிர்ப்பதையும் எல்லோருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.

இச்சட்டங்களால் அன்பழகனுக்கும் ஆபத்து உண்டு. அப்துல் ரஹ்மானுக்கும் ஆபத்து உண்டு. ஆண்டனிக்கும் ஆபத்து உண்டு.

இது குறித்து சமூக தலைவர்களிடம் விழிப்புணர்வு உள்ளது. அதை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

இதை சுற்றி வாழும் வன்னியர்கள், தேவர்கள், தலித்துகள், யாதவர்கள், நாடார்கள் உள்ளிட்ட எல்லா சமூக மக்களிடமும் இதன் அபாயங்களை விளக்கி, அவர்களை ஜனநாயக போராட்ட களத்தில் இணைக்க வேண்டும்.’

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M மாலிக், பொருளாளர் சங்கை. தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் மு.ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலீம், MJVS மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தைக்கால் சாதிக், மு.மாவட்ட நிர்வாகிகள், துளசேந்திரப்புரம்-தைக்கால், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் தெற்கு மஜக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மஜக வினரும் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைவடக்குமாவட்டம்.