கோவை: மார்ச்.09.,
குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது இங்கு கூடியிருக்கும் கூட்டம் ஏதோ தங்கள் சமுதாய பிரச்சனைகளுக்காக கூடிய கூட்டமல்ல பாசிச வாதிகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கூடிய கூட்டம் என்றும், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக அரசு NRC.NPR. தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்கிற ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு தன்னார்வத்துடன் தொடர்ந்து உணவு உள்ளிட்ட தேவைகளை வழங்கி வருபவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.
மேலும் 7.3.2020 அன்று கோவையில் நடந்த முழு அடைப்பின் போது நோயாளிகள், வெளியூர் பயணிகள், உள்ளிட்ட ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கிய கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அமைப்பின் நிர்வாகி தாக்கப்பட்டவுடன் 10 நிமிடத்தில் அதை இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள் என பொய்யான தகவல் பரப்பப்பட்டு கோவை அரசு மருத்துவமனை முன் கூட்டம் சேர்த்தியதாகவும் அதற்கு காவல் துறை மறுப்பு தெரிவிக்காததை சுட்டிக்காட்டினார்.
மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களை தாக்கியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது போல் அசம்பாவிதங்கள் நிகழாமலிருக்க கோவை அரசு மருத்துவ மனையில் நிரந்தரமாக கலவர தடுப்பு படை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கமறுக்கும் மருத்துவமனைகளை மாவட்ட அரசு நிர்வாகம் கண்டிக்கவேண்டும் மேலும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து தனது மதவெறி பேச்சுக்கள் மூலம் கலவரத்தை தூண்ட நினைக்கும் H.ராஜா, போன்றவர்களை கோவை மாவட்டத்திற்குள் காவல்துறை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
உடன் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்..
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
08-03-2020