விழிப்புணர்வுக்காக குறும் படம் எடுத்த மாணவர்கள்.! முதமி முன் அன்சாரி MLA வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!


இளம் தலைமுறையினரிடம் சமூக அக்கறைகள் அதிகரித்து வருவதற்கு கீழ்கண்ட நிகழ்வு ஒரு உதாரணமாகும்.

தோப்புத்துறையை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் இணைந்து “மதம்”. என்ற பெயரில் நல்லிணக்கம் மிக்க ஒரு குறும் படத்தையும், ‘ஹெல்மெட்’ என்ற பெயரில் விபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை எடுத்துள்ளனர்.

தோப்புதுறையைச் சேர்ந்த இளம் மாணவர்கள் Nishanth வினோத் ராஜ், ரிஸ்வான், துரை ராஜன், ஜெய பாலா, மீனாட்சி சுந்தரம், சுதர்ஷன், குமார், ராம், செல்வ குமார், அஜித், மாதவன் ஆகியோர் இணைந்து குறும்படத்தை தயாரித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்த இப்படத்திற்கு Film Free Way என்ற youtube நிறுவனம் பதக்கங்களை அனுப்பி சிறப்பித்துள்ளது.

நேற்று இந்த மாணவர்கள் மொத்தமாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இளம் வயதில் சமூக பொறுப்புணர்வுடன் குறும்படங்கள் எடுத்து சாதித்ததற்கு தன் வாழ்த்துக்களை கூறினார்.

இது போல விழிப்புணர்வுள்ள மனிதநேயமுள்ள கலை படைப்புகளை தொடர்ந்து செய்யுமாறும் இதற்கு எல்லா ஒத்துழைப்புகளையும் தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.

நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்தலிலும் கவனம் செலுத்துமாறும் அவர்களிடம் கூறினார்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#நாகைதெற்குமாவட்டம்
08-03-2020