பஹ்ரைனில் எழுச்சியோடு நடைபெற்ற சமூகநீதி மாநாடு!

image

image

image

image

பஹ்ரைன்.நவ.04., பஹ்ரைனில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் வெளிநாட்டு  பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP)யின் சார்பில் சமூகநீதி மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
தந்தைப்பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, அதில் நடைபெற்ற மாநாட்டில் SDPI, திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அகதிகளாக புறப்பட்டு கடலில் உயிர்துறந்த ரோஹிங்ய மக்களுக்காக 1 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று ஆறுதல் மவுனம் செலுத்தினர்.
பொதுச்செயலாளருக்கு பஹ்ரைன் வாழ் தமிழ் உணர்வாளர்களும், திராவிட இயக்கவாதிகளும் பொன்னாடை போர்த்தினர்.

நிகழ்வின் இறுதியாக பொதுமக்களின் கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள். இது ஒரு அரசியல் வகுப்பு போல அமைந்தது. இதை பலரும் பாராட்டி வரவேற்றனர்.

இலக்கியம், பொழுதுபோக்கு அல்லாது பஹ்ரைனில் அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டங்களில் இதுதான் பெரிது என அனைவரும் ஒன்றுபட கூறினர்.

வளைகுடா நாடுகளில் மிகவும் சிறிய நாடான பஹ்ரைனில் தமிழர்கள் நிறைவாகவே உள்ளனர். இந் நிலையில் அரங்கம் நிறைந்து கூடுதல் நாற்காலிகளும் போடப்பட்டு வெளியிலும் கூட்டம் நின்றிருந்தது.

ஆண்கள், பெண்கள் என 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும், பல்வேறு சமூக மக்களும் வருகை தந்ததும் மாநாட்டை வண்ணமயமாக காட்டியது.

மேலும், பல்வேறு ஊர்களை சேர்ந்த ஜமாத்தார்களும்,சமுதாய அமைப்புகளும் வந்திருந்து சிறப்பித்தனர்.

பொதுச்செயலாளர் பேசும்போது எங்களை விலைக்கு வாங்கும் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை என்பதை சொன்ன மாத்திரத்தில் அரங்கத்தில்
கைதட்டல்கள் விண்ணை பிளந்தன .

மஜக பரந்து விரிந்து பல்வேறு தரப்பு மக்களிடமும் செல்வாக்கு பெற்று வருகிறது என்பது பஹ்ரைனிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேசிய அனைவரும் பொதுச்செயலாளர் பணி மற்றும் மஜகவின் பணி வெகுவாக பாராட்டினார். கரங்களில்  காசுமில்லாமல், மாசுமில்லாமல் கட்சியை வழிநடத்துகிறார் என்று போற்றினர் .

தகவல்;
#IKP_ஊடக_பிரிவு
#பஹ்ரைன்_மண்டலம்.