நாகையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தில் மஜக பங்கேற்பு!


மார்ச்.09,
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் இன்று காலை முதல் தொடங்கியது.

மஜக சார்பில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் ஆகியோர் பங்கேற்று கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதில், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

இன்று தொடங்கிய போராட்டம் எதிர்வரும் 13 தேதி வரை நடைப்பெறுகிறது. இதில் இன்று மாலை மஜக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் அய்யம்பேட்டை காதர் பாட்சாவும் மற்ற தினங்களில் மாநில நிர்வாகிகளும் தொடர்ச்சியாக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.