மார்ச்.09,
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஜமாத் கூட்டமைப்பு ஏற்பாட்டில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மாப்பிள்ளை குப்பம் பள்ளிவாசல் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி நன்னிலம் வடக்கு தெருவில் அமைந்திருந்த பொதுக்கூட்ட மேடை வரை மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என திரளானோர் பஙகேற்றனர்.
இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ் மற்றும் நாகை தெற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
08/03/2020