மலேசியா.மார்ச்.08.,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் இமாமாக பணிபுரியும் நாசீர் அலி உமரி அவர்கள் எழுதிய “வியர்வை உலரும் முன்” என்ற நூல் வெளியீட்டு விழா பள்ளியின் கீழ்தளத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினார்.
இந்நூலில் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் அறிந்துகொள்ள வேண்டிய, மரணம் வருவதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அழகிய முறையில் எளிய நடையில் எடுத்துக் கூறியுள்ளார்.
இவ்விழாவில் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்மது இக்பால், மௌலவி கம்பம் பீர் முஹம்மது, தீன் ஜுவல்லர்ஸ் குழுமம் சிராஜுதீன் மற்றும் ரஃபியுதீன், செய்யது ரெஸ்டாரண்ட் உரிமையாளர் டத்தோ ஜமருல் கான், மெட்ரோ செக்யூரிட்டி உரிமையாளர் அப்துல் காதிர், டத்தோ டாக்டர் செய்யது இப்ராகிம் உள்ளிட்ட தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மலேசியா_மண்டலம்
07-03-2020