மார்ச் 09, விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கெதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் D.ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... இந்திய ஜனநாயகம் இன்று புற்றுநோய் அரிப்புக்கு ஆளானதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இல்லாமல் போனது தான். கம்யூனிஸ்ட்டுகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறு மாறி போயிருக்கும். அவர்கள் கடலோர மாநிலங்களில் ஓரளவு வலிமையாக இருப்பதால்தான், இந்திய நாடளுமன்றத்திலும், பல மாநில சட்டமன்றங்களிலும் ஜனநாயகம் உயிர் துடிப்போடு இருக்கிறது. அதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பங்களிப்புகள்தான் காரணம் என்பதை நாடு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது. இன்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடே போராடுகிறது. இதில் எல்லா ஜனநாயக சக்திகளும் களமாட வேண்டிய தருணம் இது. நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க வேண்டிய கடமை
Author: admin
மஜக நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!
நீலகிரி:மார்ச்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாக விரிவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரிமேற்குமாவட்டம்
MKP அமீரக பொதுக் குழு கூட்டம்..
அமீரகம்.மார்ச்.09., #மனிதநேயகலாச்சாரபேரவை அமீரக பொதுக்குழு கூட்டம் அமீரக IT Wing செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும் , அமீரக பொருளாலர் H.அபுல் ஹசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அமீரக துணை செயலாளர் A.அசாலி அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத கருப்பு சட்டங்களான NRC,NPR,CAA உள்ளிட்ட குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், மாணவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை தனது முழு ஆதரவினையும், புரட்சிக்கர வாழ்த்துக்களையும் தெரிவித்தல், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமீரக செயலாளராக திறம்பட பணியாற்றிய சகோதரர்.மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக துபை மாநகர செயலாளர் V.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையோடு பொதுக்குழு நிறைவுற்றது. குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், கோவையில் லட்சக்கணக்காண மக்களை திரட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிவு ஜீவிகளையும், மாணவர்
நன்னிலத்தில் நடைப் பெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில், மஜக மாநில செயலாளர் நாச்சிக் குளம் தாஜூ தீன்பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.09, திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஜமாத் கூட்டமைப்பு ஏற்பாட்டில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாப்பிள்ளை குப்பம் பள்ளிவாசல் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி நன்னிலம் வடக்கு தெருவில் அமைந்திருந்த பொதுக்கூட்ட மேடை வரை மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என திரளானோர் பஙகேற்றனர். இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ் மற்றும் நாகை தெற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 08/03/2020
நாகையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தில் மஜக பங்கேற்பு!
மார்ச்.09, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் இன்று காலை முதல் தொடங்கியது. மஜக சார்பில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் ஆகியோர் பங்கேற்று கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். இன்று தொடங்கிய போராட்டம் எதிர்வரும் 13 தேதி வரை நடைப்பெறுகிறது. இதில் இன்று மாலை மஜக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் அய்யம்பேட்டை காதர் பாட்சாவும் மற்ற தினங்களில் மாநில நிர்வாகிகளும் தொடர்ச்சியாக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.