
மார்ச் 09,
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கெதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் D.ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது…
இந்திய ஜனநாயகம் இன்று புற்றுநோய் அரிப்புக்கு ஆளானதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இல்லாமல் போனது தான். கம்யூனிஸ்ட்டுகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறு மாறி போயிருக்கும்.
அவர்கள் கடலோர மாநிலங்களில் ஓரளவு வலிமையாக இருப்பதால்தான், இந்திய நாடளுமன்றத்திலும், பல மாநில சட்டமன்றங்களிலும் ஜனநாயகம் உயிர் துடிப்போடு இருக்கிறது. அதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பங்களிப்புகள்தான் காரணம் என்பதை நாடு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது.
இன்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடே போராடுகிறது. இதில் எல்லா ஜனநாயக சக்திகளும் களமாட வேண்டிய தருணம் இது.
நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இதில் முஸ்லிம்களை மட்டும் போராடவிட்டு விட்டு , வேடிக்கைப் பார்க்க கூடாது; இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.. என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூறினார்.
எனவே தமிழகத்தில் பொது மக்கள் இந்த அநீதிக்கு எதிராக திரள வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் என அனைவரும் இதில் பாதிக்கப்படுகின்றனர். இதை ஒரளவு இப்போது உணர தொடங்கி விட்டனர். அவர்களும் பங்கேற்க தொடங்கி விட்டனர்.
நாட்டின் ஜனநாயகத்தை காக்க நடை பெறும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் நாம் நாட்டுக்காக சமரசமின்றி போராட வேண்டும்
CAA சட்டம் பற்றி மட்டுமே சிலர் பேசுகிறார்கள்., இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள். அதோடு தொடர்புடைய NRC, NPR சட்டங்களையும் சேர்த்தே பேச வேண்டும். NRC , NPR மூலம் குடியுரிமை பறிக்கப்படுபவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தால் , அவர்கள் CAA மூலம் குடியுரிமை பெற வாய்ப்பு உண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=2322158847883877&id=700424783390633
எனவே தான் CAA வில் பாராபட்சம் காட்டாதீர்கள் என்கிறோம்.
இவர்கள் நாட்டின் பன்மை கலாச்சாரத்தை தகர்க்க பார்க்கிறார்கள். எனவே மக்கள் எதிர்த்து போராடுகிறார்கள்.
மக்களின் போராட்ட உணர்வுகளை இவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை.
டெல்வியில் கூலிப்படைகள் மூலம் முஸ்விம்களை தாக்கி அழிவை ஏற்படுத்தி உள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் 13 மசூதிகளை தாக்கி உள்ளனர். இதுவரை 53 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கால்வாயில் பல பிணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பிணவாடை வீசுகிறது. அங்கு மீட்கப்படாத பிணங்கள் கிடப்பதாக சொல்கிறார்கள்.
இந்த சங்பரிவார கும்பல் நாட்டில் முன்பு செய்த கலவரங்களை கம்யூனிஸ்ட்டுகள் நன்கு அறிவார்கள்.
முன்பு இவர்கள் நடத்திய கலவரங்களில் மீரட் நகரின் கிணறுகளிலிருந்து பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. பாகல்பூரின் வயல்களிலிருந்து பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று பிணங்கள் டெல்லியின் கால்வாய்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இது நாகரீக சமூகத்திற்கு வெட்கக்கேடாகும்.
இவர்களின் வன்முறைகளுக்கு போராட்டக்காரர்கள் பணிய மாட்டார்கள்.
பாஸிஸம் வீழ்ந்தே தீரும். ஜனநாயக சக்திகளே இறுதியில் வெல்வார்கள்.
ஹிட்லரை, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட்டுகள் தான் முறியடித்தார்கள். இந்த மோடியின் ஹிட்லரிசத்தையும் கம்யூனிஸ்ட்டுகளே முறியடிப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது,
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஜம் செளகத் அலி, விழுப்புரம் நகர செயலாளர் முகமது அலி ஜின்னா, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் U. அக்பர், திருக்கோவிலூர் நகர செயலாளர் S.சாதிக் பாஷா உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.
பிறகு விழுப்புரத்தில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்ட களத்திற்கும் சென்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விழுப்புரம்_மாவட்டம்
09-0-2020