தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.10,

இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்..

அப்போது அவர் பேசியதாவது…

https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633

CAA சட்டத்தில் அகதிகளிடம் பாகுபாடு காட்ட கூடாது என்கிறோம். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிருந்து இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது.

ஆனால் இந்திய குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மதத்தால், இனத்தால், மொழியால் பாதிக்கபட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை பறிகொடுத்துவிட்டு 30 ஆண்டுகளை கடந்து அகதிகளாக நம் மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களை CAA சட்டத்தில் ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள்? என கேட்கிறோம். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் யாராவது சொன்னார்களா..?

அகதிகளிடம் பாராபட்சம் காட்ட கூடாது. மனித நேயத்தோடு அவர்களை அணுக வேண்டும்.

அவர்கள் வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். அவர்களிடம் பேதம் காட்டலாமா?

இச்சட்டத்தின்படி, பிஜி தீவிலுள்ள இந்தியர்களோ, ரீ யூனியன் நாட்டை சார்ந்த தமிழர்களோ அகதி அந்தஸ்தை பெற்று குடியுரிமை பெற தகுதி பெற முடியாது.

எல்லை நாடுகளை சேர்ந்த மதத்தால் பாதிக்கப்படும் நோபாள், பூட்டான் நாடுகளை சேர்ந்த கிறிஸ்தவர்களோ, மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியாகளோ குடியுரிமை வாய்ப்புகளை பெற முடியாது.

அம்பேத்கர் அவர்கள் நமது அரசியல் சட்டத்தை வடிவமைத்த பிறகு பின்வருமாறு கூறினார்.

இதில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஆனால் இன்றைய மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நமது அரசியல் சட்டத்தின் பிரிவு 14, 15, 16 ஆகியவற்றிருக்கு எதிராக இருக்கிறது.

எனவே தான் மக்கள் போராடுகிறார்கள்.

அசாமில் பாஜகவினரே இச்சட்டத்தை எதிர்க்கிறார்கள். அங்கு பாஜகவின் தலைவராக இருந்த பிரபல நடிகர் ஜத்தின் போரோ இதை எதிர்த்து ராஜினாமா செய்துவிட்டார். அங்கு மேலும் 12 MLAக்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.

NRC சட்டத்தை அசாமில் அமல்படுத்தியதால் சமூக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. 19 லட்சம் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் 12 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர்.

இந்த மோசமான சட்டத்தை அமல்படுத்த அசாமிற்கு மட்டும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

அசாமில் 3000 பேரை தடுப்பு முகாமில் வைக்க 40 முதல் 46 கோடி வரையிலான செலவில் சிறைகளை கட்டி இருக்கார்கள்.

அப்படியெனில் குடியுரிமை பறிக்கபட்ட மற்றவர்களை எல்லாம் சிறையில் வைக்க எவ்வளவு செலவு ஆகும்..?

இதுவெல்லாம் யாருடைய பணம்? நம்முடைய வரிப்பணம் தானே..

இந்த செலவில் எத்தனையோ பள்ளிகூடங்களை கட்டலாம். எத்தனையோ கல்லூரிகளை உருவாக்கலாம். எத்தனையோ மருத்துவமனைகளை உருவாக்கலாம். நல்ல சாலைகளை போடலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு நாட்டின் உண்மையான பிரச்சனைகளையும், பொருளாதார தோல்விகளையும் மறைக்கும் திசைதிருப்பும் அரசியலை செய்து வருகிறார்கள்.

நாம் யாராவது வேலையில்லா திண்டாத்தை பற்றி பேசுகிறோமா? தொழிற்சாலைகள் மூடப்படுவதை பற்றி பேசுகிறோமா? விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசுகிறோமா? வங்கிகள் திவால் ஆவதை பற்றி பேசுகிறோமா?

இதைபற்றி எல்லாம் பேசாமல் குடியுரிமை சட்டத்தை பற்றி தான் பேசுகிறோம், போராடுகிறோம். இது தான் மத்திய பாஜக அரசின் திசைதிருப்பும் அரசியல்.

இதை மக்கள் புரிந்துக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.

இச்சட்டங்களை எதிர்த்து நீண்ட போராடக்களத்தில் மக்கள் பயணிக்கிறார்கள்.

ஒரு திருமண வீட்டில் கூட அரை மணி நேரம் இருக்க மாட்டோம். ஆனால் காத்திருப்பு போராட்டங்களில் குடும்பம் குடும்பமாக, இரவு பகலாக உட்கார்ந்திருக்கிறோம்.

மறுமுனை தெரியாத குகைக்குள் நுழைந்தது போல, எப்போது இது முடியும் என்று தெரியாத நிலையில் போராடுகிறோம். களத்தில் இறங்கிய பிறகு இதில் பின்வாங்க போவதில்லை.

1907- 1908 ல் இருந்து இந்தியர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அரசு குடியுரிமை தொடர்பான இதே போன்ற சட்டத்தை கொண்டுவந்தது. அதை எதிர்த்து தான் காந்தியடிகள் அங்கே போராட்டம் நடத்தினார்.

இன்று இந்தியாவில் காந்தியடிகள் வழியில் அதே போன்ற சட்டத்தை எதிர்த்து, இந்தியர்களை காக்க நாம் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். இதில் நாமே வெல்வோம்.

தமிழகத்தில் இப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதி ஏற்படுத்தவும் ஒரே வழிதான் உள்ளது.

தமிழக முதல்வர் கேரளாவை போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவே இப்பிரச்சனைக்கு தீர்வை தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ஜிந்தா மதார், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக், விசிக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, மமக துணை பொதுச்செயலாளர் யாகூப், MJTS மாநில தலைவர் பம்மல் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கல்பட்டுவடக்குமாவட்டம்.