சென்னை.மார்ச்.13., தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் ஆகியோர் பங்கேற்றனர். NPR குறித்து அரசு தெளிவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மார்ச்-17 காலை 10மணி முதல் 18-ம் தேதி காலை 10மணி வரை ஒரு நாள் தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் நடத்தப்படும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 13-03-2020
Author: admin
அம்மாபட்டிணம் கோபாலப்பட்டினம் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்,மன்னைசெல்லசாமிகண்டனஉரை.!
மார்ச்.13., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அம்மாபட்டிணத்தில் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைப்பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர். பேராவூரணி எஸ்.எம்.ஏ.சலாம், மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அபுதாஹீர், ஒன்றியச் செயலாளர் செல்லத்தா, ஜெகதாபட்டிணம் செயலாளர் இர்ஷாத் அஹமத் அதிரை நகர துணைச் செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம் 11-03-2020
நாட்டின் ஜன நாயகத்தை மத்திய அரசு அச்சுறுத்தல்களைக் கொண்டு கேள்விக் குறியக்கியுள்ளது..! புளியந் தோப்பு போராட்டகளத்தில் புதுமடம் அணீஸ் கண்டன உரை..!
சென்னை.மார்ச்.13., கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை புளியந்தோப்பில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று (12-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று ஜனநாயகவாதிகளின் குரல்களை, அச்சுறுத்தலைக் கொண்டு மத்திய அரசு நெறுக்குவதாகவும், நாட்டில் ஜனநாயகம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார். இந்நிகழ்வில் மஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ரசாக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமேற்குமாவட்டம் 12-03-2020
திருப்பூர் ஷாகின்பாக் தொடர் தர்ணா போராட்டத்தில்.! கொள்கைவிளக்க மாநிலசெயலாளர் கோவைநாசர் அவர்கள் பங்கேற்பு..!
திருப்பூர்.மார்ச்.13, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூரில் திருச்சி சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் 27 வது நாளாக மிகுந்த வீரியத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை T.A.நாசர் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், பொருளாளர் ஆசீக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், துணைச் செயலாளர் யாக்கூப், வர்த்தக அணி பொருளாளர் சேக் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்காதர்கான், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 12-03-2020
அதிராம் பட்டினம் தொடர் போராட்டத்தில்.. மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்று கண்டன உரை!
அதிரை.மார்ச் 13, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டம் 19/02/2020 முதல் நடைப்பெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் எஸ்.எஸ்.நாசர் உமரி அவர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தினார். தனது உரையின் இடையே கண்டன முழக்கங்களை எழுப்பி அதனை போராட்டக்காரர்களை திரும்ப முழங்கிட செய்து போராட்ட களத்திற்கு எழுச்சியூட்டினார். இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலர் சாகுல் ஹமீது (ஸ்மார்), ஜித்தா மண்டல பொருளாளர் அதிரை சேக், நகர செயளாலர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப் மற்றும் அதிரை மஜகவினர் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சைதெற்குமாவட்டம்.