தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக்கூட்டம், மஜக_பங்கேற்பு…!

சென்னை.மார்ச்.13.,

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

NPR குறித்து அரசு தெளிவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மார்ச்-17 காலை 10மணி முதல் 18-ம் தேதி காலை 10மணி வரை ஒரு நாள் தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் நடத்தப்படும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
13-03-2020

Top