மார்ச்.15, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது.. நகர்ப்புற மக்கள் அனுபவிக்கும் நவீன கல்வியை கிராமங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். அரசு பள்ளிக் கூடங்களும் இதே அளவில் சேவை செய்ய வேண்டும் என விரும்பினாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதில் முன்னணியில் இருக்கின்றன என்பது உண்மை. இப் பள்ளிக்கூடத்தின் சிறப்பு என்னவெனில், கற்பித்தல் என்ற வட்டத்தையும் தாண்டி , மரம் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பொதுச்சேவைகளை ஊக்குவித்தல் என்று பிள்ளைகளை பன்முகத் தன்மையோடு உருவாக்குவதாகும். அதுபோல் வசதிமிக்கவர்களிடமிருந்து நல்ல ஆடைகளை பெற்று ஏழைகளுக்கு அதை வினியோகிப்பது மனிதாபிமானப் பணிகளில் ஒன்றாகும். மேலும் இந்த ஊரில் உள்ள பொதுநல சேவகர்களை கண்டறிந்து வருடந்தோறும் விருது வழங்கி சிறப்பிப்பதும் பாராட்டுக்குறியதாகும். ஒரு கல்வி நிறுவனம் கற்பித்தலையும் தாண்டி சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, மாணவ மாணவிகளையும் அவ்வாறு உருவாக்குவது வரவேற்கத்தக்கது. இன்று ஒருபுறம் கல்வி வணிகமயமாகி வரும் நிலையில்,
Author: admin
திருச்சியில் நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், ஜெய்னுலாபிதீன் பங்கேற்பு!
மார்ச் 15, திருச்சி சுப்ரமணியபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேசிய நீதியரசர் ஹரிபரந்தாமன் (ஓய்வு) சட்ட நுணுக்கங்கள் குறித்தும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் வகுப்பெடுத்தார். இதில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம். ஜெய்னுலாபிதீன் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டார். மேலும், தமிழகமெங்கும் நடைபெறும் தொடர் ஷாகின்பாக் போராட்டத்தின் பிரதிநிதிகளும், அனைத்து சமூக நல இயக்க கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கலந்தாலோசனை செய்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம். 14.03.2020
தமிழக அரசுகுழப்புகிறதா? குழம்புகிறதா? இனயம் பொதுக்கூட்டத்தில் முதமிமுன்அன்சாரி MLA கேள்வி!
கன்னியாக்குமரி மாவட்டம் இனயத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் சுப. உதயகுமார், ரஹ்மத்துல்லா பிர்தௌசி, காயல் மஹபூப் போன்றோர் உரையாற்றினர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று இதில் பேசியதாவது.. 'குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் தமிழக அரசு முடிவெடுக்காமல் குழப்புகிறது. சட்டமன்றத்தில் நேற்று (12.03.2020) முதல்வரை நானும், கருணாஸ் MLA அவர்களும் 3 முறை சந்தித்து பேசினோம். குறைந்தபட்சம் இந்த NPR சட்டத்தை தமிழகத்தில், மத்திய அரசிடமிருந்து பதில் வரும் வரை நிறுத்தி வைப்போம் என்றாவது சட்டமன்றத்தில் முதல்வரே அறிவிக்க வேண்டும் என்றோம். அவர் மறுத்து விட்டார். சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்காமல் சட்டமன்றம் முடிந்த பிறகு மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் NPR சட்டத்தை நிறுத்தி வைப்போம் என்றார். அடுத்தநாள் நாங்கள் சட்டமன்றம் நடக்கும் போது கொள்கை அறிவிப்பை வெளியில் எப்படி அறிவிக்கலாம் என சபாநாயகரிடம் 'தகவல் கோரல்' மூலம் கேள்வி கேட்டோம். உடனே பல விளக்கங்களை கொடுத்து விட்டு NPR ஐ செயல்படுத்த போவதில்லை என அமைச்சர் உதயக்குமார் கூறினார். Press meet ல் நிறுத்தி வைப்பு
ரோஹிந்தியர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு யாருக்கும் ஏற்படக்கூடாது லெப்பைகுடிகாட்டில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!
மார்ச்.14., பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் மத்திய அரசின், மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று பேசியதாவது... காத்திருப்பு போராட்ட களங்கள் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகின்றன, ஆண்கள் பின் வாங்கினாலும் பெண்கள் பின் வாங்க தயாராக இல்லை. (பெண்கள் தரப்பில் ஆவேச முழக்கம்) அந்த அளவிற்கு இச்சட்டம் குறித்து மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு பர்மாவில் (மியான்மரில்) அன்றைய இராணுவ ஆட்சி இதே போன்று ஒரு சட்டத்தை அங்கு நிறைவேற்றியதால் தான் ரோஹிங்கியாக்கள் குடியுரிமையை இழந்தார்கள். இன்று நாடற்றவர்களாக திரிகிறார்கள். மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தியா என அகதிகளாக சென்று தவிக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவில் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் உறுதியாக நாங்கள் களமாடுகிறோம், எல்லா மக்களுக்கும் சேர்ந்து போராடுகிறோம். அகதி முகாம்களுக்கு சென்று சாவதை விட வாழ்வதற்காக போராடுவதே மேல் என்று துணிந்து விட்டோம். (மக்கள் ஆவேசம்) இச்சட்டங்களால் இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வரை பாதிக்கபடுவார்கள் என அஞ்சப்படுகிறது. இத்தனை பேரை எத்தனை
தலைமை செயலகத்தில் தலைவர்கள் சந்திப்பு..! மஜகசார்பில்அவைத்தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!!
சென்னை.மார்ச்.14., மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில். தமிழக அரசு சார்பாக இன்று மாலை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் கட்சிகள் மற்றும் அமைப்பினரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அவைத்தலைவர் நாசர் உமரி தலைமையில் துணைப் பொதுச் செயலாளர்கள் சுல்தான் அமீர் மற்றும் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்கள். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING, #சென்னை. 14-03-2020