தமிழக அரசுகுழப்புகிறதா? குழம்புகிறதா? இனயம் பொதுக்கூட்டத்தில் முதமிமுன்அன்சாரி MLA கேள்வி!

கன்னியாக்குமரி மாவட்டம் இனயத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் தோழர் சுப. உதயகுமார், ரஹ்மத்துல்லா பிர்தௌசி, காயல் மஹபூப் போன்றோர் உரையாற்றினர்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று இதில் பேசியதாவது..

‘குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் தமிழக அரசு முடிவெடுக்காமல் குழப்புகிறது. சட்டமன்றத்தில் நேற்று (12.03.2020) முதல்வரை நானும், கருணாஸ் MLA அவர்களும் 3 முறை சந்தித்து பேசினோம்.

குறைந்தபட்சம் இந்த NPR சட்டத்தை தமிழகத்தில், மத்திய அரசிடமிருந்து பதில் வரும் வரை நிறுத்தி வைப்போம் என்றாவது சட்டமன்றத்தில் முதல்வரே அறிவிக்க வேண்டும் என்றோம். அவர் மறுத்து விட்டார்.

சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்காமல் சட்டமன்றம் முடிந்த பிறகு மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் NPR சட்டத்தை நிறுத்தி வைப்போம் என்றார்.

அடுத்தநாள் நாங்கள் சட்டமன்றம் நடக்கும் போது கொள்கை அறிவிப்பை வெளியில் எப்படி அறிவிக்கலாம் என சபாநாயகரிடம் ‘தகவல் கோரல்’ மூலம் கேள்வி கேட்டோம்.

உடனே பல விளக்கங்களை கொடுத்து விட்டு NPR ஐ செயல்படுத்த போவதில்லை என அமைச்சர் உதயக்குமார் கூறினார். Press meet ல் நிறுத்தி வைப்பு என்றார்கள். சட்டமன்றத்தில் பேசும் போது செயல்படுத்த போவதில்லை என்கிறார்கள். அவர்கள் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள். யாருக்கோ பயந்து கொண்டு முடிவெடுக்க தயங்குகிறார்கள்.

எனவே நாங்கள் அமைதி வழியில் உரிமைக்காக, நீதிக்காக எல்லா மக்களையும் இணைத்து போராடிக் கொண்டேயிருப்போம்.’

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட செயலாளர் S.பஜுருல் ஹபீஸ், பொருளாளர் G.சர்சில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீல்பிஹார் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் M.முஜிபுர் ரஹ்மான், M.சாதிக்அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.A.நவாஸ் அன்வர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர் கான், மாநகர துணை செயலாளர் எஜாஸ், பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாக்குமரி_மாவட்டம்.
13.03.2020