ரோஹிந்தியர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு யாருக்கும் ஏற்படக்கூடாது லெப்பைகுடிகாட்டில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.14.,

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் மத்திய அரசின், மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று பேசியதாவது…

காத்திருப்பு போராட்ட களங்கள் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகின்றன, ஆண்கள் பின் வாங்கினாலும் பெண்கள் பின் வாங்க தயாராக இல்லை. (பெண்கள் தரப்பில் ஆவேச முழக்கம்) அந்த அளவிற்கு இச்சட்டம் குறித்து மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

1982 ஆம் ஆண்டு பர்மாவில் (மியான்மரில்) அன்றைய இராணுவ ஆட்சி இதே போன்று ஒரு சட்டத்தை அங்கு நிறைவேற்றியதால் தான் ரோஹிங்கியாக்கள் குடியுரிமையை இழந்தார்கள்.

இன்று நாடற்றவர்களாக திரிகிறார்கள். மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தியா என அகதிகளாக சென்று தவிக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவில் யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் உறுதியாக நாங்கள் களமாடுகிறோம், எல்லா மக்களுக்கும் சேர்ந்து போராடுகிறோம்.

அகதி முகாம்களுக்கு சென்று சாவதை விட வாழ்வதற்காக போராடுவதே மேல் என்று துணிந்து விட்டோம். (மக்கள் ஆவேசம்)

இச்சட்டங்களால் இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வரை பாதிக்கபடுவார்கள் என அஞ்சப்படுகிறது.

இத்தனை பேரை எத்தனை சிறைகளில் வைக்க முடியும்? எத்தனை நாளுக்கு உணவு, கல்வி, இருப்பிட வசதிகளை வழங்க முடியும்?

NRC அமல்படுத்தியதனால் அஸ்ஸாமில் ஏற்பட்ட சமூக சீராழிவுகளை அறிந்த பிறகு தான் நாடே பதற்றப்படுகிறது.

நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது, அவற்றையெல்லாம் தீர்க்காமல் மக்களை திசை திருப்பும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. இதை மக்கள் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்டச் செயலாளர் முஜிபுர், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜஹாங்கீர், ஈஸ்வரன், சாகுல் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பெரம்பலூர்_மாவட்டம்
14-03-2020