செங்கல்பட்டு., மார்ச்.03, திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்.. கடந்த வாரம் அஸ்ஸாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் குடியுரிமை அதிகரிகளிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம், எங்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய ஆவணங்கள் செல்லாது, என்றும் குடியுரிமை சான்றிதல் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றும் தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் ஜாபிதா பேகம் மற்றொருவரின் பெயர் முனீந்தர
Tag: எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!
கருப்புசட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! ஹாரூன்ரசீது பங்கேற்பு.
புதுக்கோட்டை.பிப்.13.., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் பிப்ரவரி 11 அன்று வாவுசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொகூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநிலப் பொருளாளர் எஸ்எஸ்.ஹாரூன் ரசீத் அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் ஐயா தர்மயுகவழி பேரவை தலைவர் பாலமுருகன், YMJ தலைவர் அல்தாஃபி, சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முபாரக் அலி தலைமையில் மஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டை_மாவட்டம் 11-02-2020
இந்தியாவின் அரசியல் சாசனத்தை நேசிப்பவர்களே போராடுகிறார்..!! மஜக பொருளாளர் பேச்சு
வந்தவாசி.ஜனவரி.25., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சிகள் மற்றும் இயங்கள் சார்பாக பரவலாக அமைதி வழியில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்று (25.01.2020) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்... இந்த கறுப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களும், அறிவார்ந்த சமூகமும் போராடுகின்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்த சட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்ட குடியரசுத் தலைவரின் கையால் கல்லூரியில் படித்த பட்டத்தைப் பெற விரும்பவில்லை என்று புறக்கணித்த ஆய்வு மாணவர்கள் சகோதரர் அருண்குமாரும், சகோதரி கிருத்திகாவும் இஸ்லாமியர்களா என்று கேள்வி எழுப்பினார். இதே போல், மேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் மாணவி டெபோஸ்மிதா சவுத்ரி அவர்கள் மேடையில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு குடியுரிமை திருத்த சட்ட நகலை
எங்கள் தாய் மண்ணைவிட்டு நாங்கள் எங்கேயும் செல்ல மாட்டோம்!! மோடியும்அமித்ஷாவும் கைலாசா செல்லலாம்!! எஸ்எஸ்ஹாருண்ரஷீது எழுச்சியுரை!!
ஜன.25., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது.Mcom. அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது இந்தியா எங்களின் தாய்மண் எங்களுக்கு குடியுரிமை தருகிறோம் வாருங்கள் என அரபு நாடுகள் அழைத்தாலும் செல்லமாட்டோம் ஏனெனில் அங்கு மன்னர் ஆட்சியின் கீழ் இருப்பதை விட எங்கள் இந்து சகோதரர்களும் கிறிஸ்தவ சகோதரர்களும் மாமன் மச்சான்கள் போல் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவை மட்டுமே நேசிக்கிறோம் இருபோதும் இம்மண்ணை விட்டு செல்லமாட்டோம் எங்களை பிரிக்க நினைக்கும் மோடியும், அமித்ஷாவும், வேண்டுமானால் கைலாசா நாட்டிற்கு செல்லலாம் என பேசினார். இந்நிகழ்வில் YMJ தலைவர் அல்தாபி, மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர். மஜக சார்பில் மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுபக்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி, அம்ஜத் மீரான், தேவாரம், அபுதாஹிர், ஷாஜகான், இக்ராம்,
அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை விரட்டியடிப்போம்!
#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!! ஜனவரி.10., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடைய வேண்டும் என்று கூறினார், மேலும், அவர் பேசும் போது அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள இந்த கருப்புச் சட்டங்களை நாட்டை விரட்டியடிக்க வேண்டும் என்றும் NPR. NRC.போன்ற விவரங்களை கேட்டு நம்முடைய பகுதிகளுக்குள் யார் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் அனைத்து ஜமாத், கட்சிகள், மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும்