
செங்கல்பட்டு., மார்ச்.03,
திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது..
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்..
கடந்த வாரம் அஸ்ஸாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் குடியுரிமை அதிகரிகளிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம், எங்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய ஆவணங்கள் செல்லாது, என்றும் குடியுரிமை சான்றிதல் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றும் தீர்ப்பளித்தார்.
வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் ஜாபிதா பேகம் மற்றொருவரின் பெயர் முனீந்தர பிஸ்வாஸ் இவர்களில் ஒருவர் முஸ்லிம் இன்னொருவர் இந்து. குடியுரிமை வழங்குவதில் இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது, எனவே அனைத்து சமுதாய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இச்சட்டத்தால் பாதிக்கப்படுவது அனைத்து சமுதாய மக்களும் என்பதை உணர்ந்து நமது எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இப்பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் காஞ்சி ஜிந்தா மதார், மாவட்ட துணைச் செயலாளர் சலீம், நகர, கிளை நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பெண்கள் உள்பட பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#செங்கல்பட்டு_மாவட்டம்
04-03-2020