பத்திரிக்கையாளர் கார்த்திக் மீது தாக்குதல்.! முதமிமுன் அன்சாரி MLA கண்டனம்.!

சிவகாசியில் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்தியாளர் கார்த்திக் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

செய்தியாளர்கள் செய்தி வெளியிடுவது அவர்களது பணி சுதந்திரம் சம்மந்தப்பட்டதாகும்.

அவர்கள் வெளியிடும் செய்தியில் பொய்யான தகவலோ அல்லது மனம் வருந்தும் வகையில் செய்திகள் இருந்தாலோ அது சம்மந்தமாக மறுப்பு தெரிவிக்கலாம். ஆசிரியரிடம் முறையிடலாம்.

வழக்கு தொடர்ந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். இப்படி வழிகள் பல உண்டு.

அதைவிடுத்து சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து கொண்டு ஒரு பத்திரிகையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சிவகாசியில் தாக்கப்பட்டிருப்பது பத்திரிக்கையாளரோ ஒரு தனி மனிதரோ அல்ல, அங்கே நசுக்கப்பட்டது கருத்துரிமையும் சட்டமும் ஆகும்.

இதற்கு பின்னணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கிறார் என செய்தியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது,

தொடர்ந்து சர்ச்சை கருத்துக்கள், கலவரங்களை தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தற்போது இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது கண்டனத்திற்குரியது.

அவர் மீதும், செய்தியாளர் கார்த்திக்கை தாக்கியவர்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
04.03.2020