புதுக்கோட்டை.மார்ச்.06, புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோபாலப்பட்டினத்தில் 5-வது நாளாக குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதி வழி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று (05.03.2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஊக்க உரை நிகழ்த்தினார். அதில் பேசியதாவது... இதுவரை வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்திவருக்கிறார்கள், ஏன் என்று சொன்னால் அதற்கு காரணம் இந்நாட்டின் ஜனநாயகத்தை நாசப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒரு தாய் மக்களாய் எல்லோரும் ஓர் அணியில் இணையவேண்டும் என்பதற்காக தான். அதனால் தான் இந்த கருப்பு சட்டங்களை அனுமதிக்க கூடாது, ஏன் என்று சொன்னால் காலம், காலமாக உறவு பாராட்டி வரும் இந்த மக்களுக்கு மத்தியிலே பிரிவினை ஏற்படுத்த கூடிய, பாகுபாடுகளை உருவாக்க கூடிய, இந்த CAA, NRC, NPR,.. போன்ற சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி போராடி வருகின்றோம். துரதிஷ்டவசமாக என்ன நடக்கிறது என்று சொன்னால், இந்த போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். உண்மையிலேயே அஸ்ஸாமில் இந்த NRC சட்டம் அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் 19-இலட்சம்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும்.! முதமிமுன்அன்சாரிMLA
புதுக்கோட்டை.மார்ச்.6, அம்மாபட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசியதாவது... இரவும், பகலுமாக மக்கள் அமைதி வழியில் கூடி போராடுகிறார்கள். போக்குவரத்துக்கு சிறிதும் பாதிப்பில்லை. யாருக்கும் தொந்தரவு இல்லை. இப்படி ஜனநாயக வழியில் போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும். வேலைகளை விட்டு விட்டு, வருமானத்தை இழந்து விட்டு, குடும்பம், குடும்பமாக குடியுரிமைக்காக மக்கள் போராடுகிறார்கள். இது ஏன்? என்று அரசு யோசிக்க வேண்டும். தந்தையை கைது செய்தால், தாய் களத்துக்கு வந்து போராடுவார். தாயை கைது செய்தால் தந்தை வந்து போராடுவார். இருவரையும் கைது செய்தால் பிள்ளைகள் போராடுவார்கள். (பலத்த கைத்தட்டல்) உரிமைக்காக சளைக்காமல் போராடுவோம். சமரசமின்றி போராடுவோம். வன்முறையற்ற அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க நடைபெறும் அறவழி போராட்டம். ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம். ஒரு தாசில்தார் கையில் குடியுரிமையை ஒவ்வொருவரும் நிருபிக்க வேண்டிய அவலத்தை இச்சட்டம் வழங்கியுள்ளது. அஸ்ஸாமில் அப்பாவி மக்களை மிரட்டி லஞ்சம் பெற்று பல அதிகாரிகள் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள். இந்த அவலம் எங்கும் வரக்கூடாது என்பதால் தான் இந்த
தேன்கூட்டில் கைவைத்து விட வேண்டாம்! முதமிமுன்அன்சாரி MLA எச்சரிக்கை!
மார்ச் 06, அதிராம்பட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசியதாவது... நீண்ட நெடிய நமது போராட்டத்தில் அமைதியான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். எமது நியாயங்களை கேட்காமல், அடக்கு முறைகளை ஏவி ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது. குண்டாந்தடிகளும், தோட்டாக்களும் மக்களின் உணர்வுகளை நசுக்கி விட முடியாது. நாங்கள் அமைதி வழியில் போராடுவோம். வன்முறைகளை செய்ய மாட்டோம். அதற்கு துணை போகவும் மாட்டோம். பொறுப்புணர்வோடு தொடர்ந்து போராடுவோம். (பெண்கள் தரப்பில் பலத்த கைத்தட்டல்) இம்மக்கள் நினைத்தால், கிழக்கு கடற்கரை சாலையில் போராடியிருக்க முடியும். யாருக்கும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான் உள் வீதியில் போராடுகிறார்கள். இப்படி அமைதி வழியில் போராடும் மக்களை கலைக்க நினைத்தால், அது விபரீதமாகிவிடும். அதன் பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் . தேன் கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகளும் பொதுச் செயலாளருடன் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சைதெற்குமாவட்டம். 05/03/2020
நீதிபதிகள் கள நிலவரத்தை யோசிக்கவேண்டாமா.?முதமிமுன் அன்சாரி MLA கேள்வி.!
திருவாரூர்.மார்ச்.5, முத்துப்பேட்டையில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அனுமதி இன்றி போராடுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியிறுக்கிறது. காவல் துறை இடம் ஒதுக்காததால் தான், தாங்கள் விரும்பும் இடத்தில் மக்கள் அமர்ந்து போராடுகிறார்கள். இங்கு பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? மக்கள் ஓரமாக அமர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை இடம் தந்தால் அதில் அமர்ந்து போராடுவார்கள். அரசுக்கு எதிராக அமைதியாக போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி உள்ளது. கள நிலவரத்தை நீதிபதிகள் யோசிக்க வேண்டாமா? சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன பிறகும், உங்களால் யாரையாவது கைது செய்ய முடிந்ததா? முடியுமா? ஏனெனில் கள நிலவரம் அப்படி உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை, எல்லா மக்களையும் அரவணைத்து அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது வாழ்வுரிமைக்கான போராட்டம். சமரசம் செய்ய மாட்டோம். போராட்டக் குழுவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். பேச்சாளர்களை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்துங்கள். முழக்கங்களை சரி பார்த்த பிறகு
இந்துக்களுக்கும் குடியுரிமை மறுக்கப்படுகிறது மாநிலப்பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பேச்சு…!!
செங்கல்பட்டு., மார்ச்.03, திருவல்லிக்கேணி வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் மடிப்பாக்கம் வட்டார ஜமா அத்துல் உலமா சபை உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து 03-03-2020 அன்று ஆலந்தூர் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்.. கடந்த வாரம் அஸ்ஸாம் கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவர்கள் குடியுரிமை அதிகரிகளிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நில ஆவணம் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம், எங்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள், எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய ஆவணங்கள் செல்லாது, என்றும் குடியுரிமை சான்றிதல் பெற பிறப்பு சான்றிதழ் அவசியம் என்றும் தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவர் ஜாபிதா பேகம் மற்றொருவரின் பெயர் முனீந்தர