புதுக்கோட்டை.மார்ச்.6,
அம்மாபட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசியதாவது…
இரவும், பகலுமாக மக்கள் அமைதி வழியில் கூடி போராடுகிறார்கள். போக்குவரத்துக்கு சிறிதும் பாதிப்பில்லை. யாருக்கும் தொந்தரவு இல்லை.
இப்படி ஜனநாயக வழியில் போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்.
வேலைகளை விட்டு விட்டு, வருமானத்தை இழந்து விட்டு, குடும்பம், குடும்பமாக குடியுரிமைக்காக மக்கள் போராடுகிறார்கள். இது ஏன்? என்று அரசு யோசிக்க வேண்டும்.
தந்தையை கைது செய்தால், தாய் களத்துக்கு வந்து போராடுவார். தாயை கைது செய்தால் தந்தை வந்து போராடுவார். இருவரையும் கைது செய்தால் பிள்ளைகள் போராடுவார்கள். (பலத்த கைத்தட்டல்)
உரிமைக்காக சளைக்காமல் போராடுவோம். சமரசமின்றி போராடுவோம். வன்முறையற்ற அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம்.
இது நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க நடைபெறும் அறவழி போராட்டம். ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம்.
ஒரு தாசில்தார் கையில் குடியுரிமையை ஒவ்வொருவரும் நிருபிக்க வேண்டிய அவலத்தை இச்சட்டம் வழங்கியுள்ளது.
அஸ்ஸாமில் அப்பாவி மக்களை மிரட்டி லஞ்சம் பெற்று பல அதிகாரிகள் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள். இந்த அவலம் எங்கும் வரக்கூடாது என்பதால் தான் இந்த சட்டங்களை எதிர்க்கிறோம்.
மக்களை அமைதிப் படுத்த ஒரே வழிதான் உள்ளது.
மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதுவே பிரச்சனைக்கு தீர்வை தரும்.
இச்சட்டங்களால் இந்துக்கள், முஸ்லிம்கள், கிரித்தவர்கள், தலித்துகள் என எல்லோரும் பாதிக்கப்படுவார்கள். இதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.
அம்மாபட்டினத்தை சுற்றி வாழும் பிற சமூக மக்களிடம் இந்த அபாயங்களை எடுத்துக் கூறி, அவர்களையும் களத்தில் திரட்ட வேண்டும். ஜனநாயக முறையில் போராட்ட களத்தில் அனைவரையும் உள்ளடக்கி விரிவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் முபாரக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும், ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் பொதுச் செயலாளருடன் திரளாக கலந்துக் கொண்டனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்
05-03-2020