மாணவர்கள் வீட்டுப்பாடங்களை போராட்டகளத்தில் எழுதுகிறார்கள், இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவே முடியாது.!! முதமிமுன்அன்சாரி MLA

புதுக்கோட்டை.மார்ச்.06,

புதுக்கோட்டை மாவட்டம், கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோபாலப்பட்டினத்தில் 5-வது நாளாக குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதி வழி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று (05.03.2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஊக்க உரை நிகழ்த்தினார்.

அதில் பேசியதாவது…

இதுவரை வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்திவருக்கிறார்கள், ஏன் என்று சொன்னால் அதற்கு காரணம் இந்நாட்டின் ஜனநாயகத்தை நாசப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒரு தாய் மக்களாய் எல்லோரும் ஓர் அணியில் இணையவேண்டும் என்பதற்காக தான்.

அதனால் தான் இந்த கருப்பு சட்டங்களை அனுமதிக்க கூடாது, ஏன் என்று சொன்னால் காலம், காலமாக உறவு பாராட்டி வரும் இந்த மக்களுக்கு மத்தியிலே பிரிவினை ஏற்படுத்த கூடிய, பாகுபாடுகளை உருவாக்க கூடிய, இந்த CAA, NRC, NPR,.. போன்ற சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி போராடி வருகின்றோம்.

துரதிஷ்டவசமாக என்ன நடக்கிறது என்று சொன்னால், இந்த போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே போராடுகிறார்கள் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள்.

உண்மையிலேயே அஸ்ஸாமில் இந்த NRC சட்டம் அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் 19-இலட்சம் மக்கள் அங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த 19 இலட்சத்திலே 12 இலட்சம் மக்கள் இந்து சமுதாய சகோதர சகோதரிகளே என்ற உண்மையை பலரும் இங்கு அறியவில்லை, நாமும் இதைப்பற்றி விரிவாக யாரிடமும் சொல்லவும் இல்லை.

அதனுடைய விளைவாக இந்த சட்டங்கள் என்பது குறிப்பிட்ட மக்களுக்கு தான் ஆபத்து என்ற தோற்றம் உருவாகி உள்ளது. அப்படி அல்ல இந்த குடியுரிமை கருப்பு சட்டங்கள் அமுலானால் ஹிந்துக்களுக்கு, முஸ்லிம்களும், கிரித்தவர்களும், தலித்துகளும் பாதிக்க படுவார்கள்.

அந்த அளவிற்கு இந்த சட்டங்களிலே அபாயகரமான ஆறு கேள்விகளை உள்ளடக்கி இருக்கிறார்கள்.

உன் தந்தையுடைய, பிறந்த ஊர் எது?, பிறந்த தேதி எது?, அவர் தந்தையுடைய பிறந்த ஊர் எது? பிறந்த தேதி எது? என்பன போன்ற கேள்விகளை கேட்க்கிறார்கள்.

இந்தியாவிலே 1971-க்கு பிறகு தான் இதுபோன்ற விவகாரங்கள் அனைத்துமே ஆவணம் படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு உங்கள் தந்தை எந்த ஊரில் பிறந்தார் என்று கேட்டால் தெரியாது, தந்தை பிறந்த தேதி என்ன என்று கேட்டால் தெரியாது.

நரேந்திர மோடி அவர்கள் தனது தேர்தல் ஆவண பத்திரத்திலேயே இரண்டு பிறந்த தேதியை கொடுத்து இருக்கிறார்.

ஒரு பிரதமரின் நிலையே இது தான் என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி யால் உங்கள் தந்தை, தாத்தாவின் பிறந்த தேதியையும் இடத்தையும் காட்ட முடியுமா? என்று சொன்னால் காட்ட முடியாது.

எனவேதான் நாங்கள் சொல்கிறோம் அசாமில் இந்த சட்டங்களால் மிகப்பெரிய சமூக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=2315383081894787&id=700424783390633

தந்தையை இந்தியர் என்கிறார்கள் தாயை அன்னியர் என்கிறார்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்த மூத்த மகனை இந்தியர் என்கிறார்கள் இளைய மகனை நீ இந்த நாட்டில் பிறந்தவன் இல்லை என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட குழப்பங்களை அசாமில் ஏற்படுத்திய அந்த சட்டங்களை தான் நாடு முழுக்க அமல்படுத்துவோம் என்று மத்திய பாஜக அரசு சொன்ன போது அதற்கு எதிராக நாம் களமாடி வருகிறோம்.

எனவே இந்த போராட்டங்களை எல்லா மக்களும் உள்ளடக்கிய ஒரு போராட்டமாக விரிவுபடுத்த வேண்டும்.

நம்மைச் சுற்றி உள்ள மீனவ மக்கள், தலித் சமுதாய மக்கள் உள்ளிட்ட ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களை அனைவரையும் நாம் சந்தித்து பேசவேண்டும். உங்கள் கிராமங்களை சுற்றி இருக்கக் கூடிய எல்லா மக்களிடமும் சென்று இந்த அபாயத்தை எடுத்துக்கூறுங்கள்.

அன்பழகனுக்கு அதே ஆபத்துதான், அன்சாரிக்கும் அதை ஆபத்துதான், ஆண்டனிக்கும் அதே ஆபத்துதான், எனவே நம் எல்லோருக்கும் இந்த ஆபத்து இருக்கிறது என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒரு ஊரில் இச்சட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது விட்டது என்றால் அந்த ஊருக்கு தாசில்தார் வருவார், ஒரு ஐந்து பேரிடம் உங்களுடைய குடியுரிமையில் குழப்பங்கள் இருக்கிறது என்று சொல்வார், ஐந்து பேரில் ஒருசிலருக்கு குழப்பங்கள் இருக்கும் நீங்கள் அவருக்கு லஞ்சம் கொடுக்க முனைவீர்கள். அவரும் கேட்பார். இதுதான் அசாமிலும் ஏற்பட்டது.

நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம் ஆனால் லஞ்சத்தை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது இது பல அரசு ஊழியர்களை லஞ்சத்தின் மூலமாக கோடீஸ்வரர்களாக மாற்றும். லஞ்சம் தலைவிரித்தாடும்.

ஒரு வீட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால் ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்து விடுவார்களா? ஆளுக்கு ஒரு இலட்ச ரூபாய் கொடுத்து விடுவார்களா?

இதுதான் அசாமிலும் நடந்தது .அசாமில் மிரட்டி பலரிடம் பணம் பறித்து குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள் எனவேதான் இந்த சட்டங்கள் வேண்டாம் என்று சொல்கிறோம்.

எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறும்வரை சமரசமின்றி அமைதி வழியில், ஜனநாயக வழியில் நமது போராட்டங்கள் தொடரும்.

இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. அனுமதி பெறாத போராட்டங்களை அப்புறப்படுத்துங்கள், மீறி போராடினால் கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

மதியம் 12 மணிக்கு தீர்ப்பு சொன்னார்கள். மணி இரவு 10 ஆகிறது யாரையாவது கைது செய்ய முடிந்ததா? கைது செய்யக் கூடிய சூழல் தான் இருக்கிறதா?? களத்தில் மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள், குழந்தைகளுடன் பெண்கள் இங்கு வந்திருக்கிறார்கள், மாணவர்கள் தங்களது வீட்டு பாடங்களை இந்த காத்திருப்பு போராட்டங்களில் வந்து செய்துகொண்டிருக்கிறார்கள். குடும்பம், குடும்பமாக மக்கள் போராடும் போது எத்தனை பேரை கைது செய்வீர்கள்?

ஒரு இலட்சம் பேரை கைது செய்வீர்களா? எந்த சிறையில் வைப்பீர்கள்? தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் ஒரு இலட்சம் பேரை கைது செய்தால் அதைத் தாங்கக் கூடிய சிறைச்சாலைகள் தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது?? எத்தனை பேர் மீது நீங்கள் எப்ஐஆர் போட முடியும்?

அமைதி வழியில் பொறுமையாக போராடக்கூடிய மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள்.

சட்டமே மக்களுக்காகத்தான். மக்கள் அந்த சட்டங்களை எதிர்க்கும் போது அந்த சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

எங்கள் போராட்டங்களை நீர்த்துப்போக உங்களால் செய்யவே முடியாது.

நாங்கள் குடியுரிமைக்காக போராடுகிறோம், வாழ்வுரிமைக்காக போராடுகிறோம், நாட்டின் அடுத்த தலைமுறைகளை பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறோம், இந்தியாவின் அரசியல் சாசன சட்ட மரபுகளைக் காக்க போராடுகிறோம், இந்தியாவின் சகோதரத்துவத்தை காக்க போராடுகிறோம், இந்தியாவில் சம உரிமை பாதுகாக்காக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுகிறோம்.

இதை கட்சிகள் நடத்தவில்லை, இயக்கங்கள் நடத்தவில்லை, தலைவர்கள் நடத்தவில்லை, மக்களே மக்களுக்காக போராடக் கூடிய இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.

இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஒரு காலத்திலும் நரேந்திர மோடியும், அமித் ஷாவும், பாசிஸ்டுகளும் வெல்லவே முடியாது. ஜனநாயகம் தான் வெல்லும். மக்களே இந்த இறுதி போராட்டத்தில் வெல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மஜக செயலாளர் இ.முபாரக் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மாற்றும் மஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டைகிழக்குமாவட்டம்
05.03.2020