You are here

ஜனவரி 21 தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி…மயிலாடுதுறையில் மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர பரப்புரை!


ஜன.18,

மத்திய அரசின் 3 உழவர் ஒழிப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் எதிர்வரும் ஜனவரி 21 அன்று தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற உள்ளது.

இதற்கு மனிதநேய ஐனநாயக கட்சி கள ஆதரவு அளித்துள்ளது.

இன்று மயிலாடுதுறையில் துண்டு பிரசுர பரப்புரை மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் தலைமையில் நடைப்பெற்றது.

மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டல துணை செயலாளர் K.M.ஷபிர் அஹமது பங்கேற்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரையை தொடங்கி வைத்தார்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், மக்கள் கூடுமிடங்களில் துண்டு பிரசுர பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தஞ்சையில் நடைப்பெறும் பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திரளனோர் சென்று பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன், துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், நீடூர் மிஸ்பாஹுதீன், அஜ்மல் உசேன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் நீடூர் ஜெப்ருதீன், மாணவர் இந்தியா செயலாளர் அமீருல் அஸ்லம், குத்தாலம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் முஹம்மது லிஃபாஸ், மாயவரம் நகர செயலாளர் மருத்துவர் சத்யா, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நகர, ஒன்றிய மஜகவினர் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.

Top