
மார்ச் 06,
அதிராம்பட்டினத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசியதாவது…
நீண்ட நெடிய நமது போராட்டத்தில் அமைதியான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம்.
எமது நியாயங்களை கேட்காமல், அடக்கு முறைகளை ஏவி ஒடுக்கி விடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது.
குண்டாந்தடிகளும், தோட்டாக்களும் மக்களின் உணர்வுகளை நசுக்கி விட முடியாது.
நாங்கள் அமைதி வழியில் போராடுவோம். வன்முறைகளை செய்ய மாட்டோம். அதற்கு துணை போகவும் மாட்டோம். பொறுப்புணர்வோடு தொடர்ந்து போராடுவோம். (பெண்கள் தரப்பில் பலத்த கைத்தட்டல்)
இம்மக்கள் நினைத்தால், கிழக்கு கடற்கரை சாலையில் போராடியிருக்க முடியும்.
யாருக்கும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான் உள் வீதியில் போராடுகிறார்கள்.
இப்படி அமைதி வழியில் போராடும் மக்களை கலைக்க நினைத்தால், அது விபரீதமாகிவிடும். அதன் பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் .
தேன் கூட்டில் கை வைத்து விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகளும் பொதுச் செயலாளருடன் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைதெற்குமாவட்டம்.
05/03/2020