நீதிபதிகள் கள நிலவரத்தை யோசிக்கவேண்டாமா.?முதமிமுன் அன்சாரி MLA கேள்வி.!

திருவாரூர்.மார்ச்.5,

முத்துப்பேட்டையில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது..

குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அனுமதி இன்றி போராடுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியிறுக்கிறது.

காவல் துறை இடம் ஒதுக்காததால் தான், தாங்கள் விரும்பும் இடத்தில் மக்கள் அமர்ந்து போராடுகிறார்கள்.

இங்கு பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா? திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகளுக்கு ஏதாவது பாதிப்பா?

மக்கள் ஓரமாக அமர்ந்து போராடுகிறார்கள். காவல்துறை இடம் தந்தால் அதில் அமர்ந்து போராடுவார்கள்.

அரசுக்கு எதிராக அமைதியாக போராடுவதில் தவறில்லை என உச்ச நீதிமன்றமே சொல்லி உள்ளது.

கள நிலவரத்தை நீதிபதிகள் யோசிக்க வேண்டாமா?

சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன பிறகும், உங்களால் யாரையாவது கைது செய்ய முடிந்ததா? முடியுமா? ஏனெனில் கள நிலவரம் அப்படி உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை, எல்லா மக்களையும் அரவணைத்து அமைதி வழியில் போராடிக் கொண்டே இருப்போம். இது வாழ்வுரிமைக்கான போராட்டம். சமரசம் செய்ய மாட்டோம்.

போராட்டக் குழுவுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

பேச்சாளர்களை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்துங்கள். முழக்கங்களை சரி பார்த்த பிறகு அதை அனுமதியுங்கள். இதனால் ஒரு பிரச்சனை ஏற்பட்டு, அது போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.

முத்துப்பேட்டையை சுற்றி வாழும் தேவர், முத்தரையர், பிள்ளைமார், தலித்துகள் உள்ளிட்ட பிற சமூக சகோதரர்களை, கிராம ஊர் பஞ்சாயத்தார் களை சந்தித்து இக் கறுப்பு சட்டங்களின் அபாயங்களை விளக்கி, அவர்களையும் களத்தில் இணையுங்கள்.

இது எல்லா மக்களுக்கும் ஆபத்தான சட்டங்களாகும்..

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதை கூறுங்கள்.

எனவே நாட்டின் சமூக நீதியை, ஜனநாயகத்தை பாதுகாக்க எல்லோரும் களத்தில் இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவாரூர்_மாவட்டம்
05-03-2020