கோவை: மார்ச்.09., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது இங்கு கூடியிருக்கும் கூட்டம் ஏதோ தங்கள் சமுதாய பிரச்சனைகளுக்காக கூடிய கூட்டமல்ல பாசிச வாதிகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கூடிய கூட்டம் என்றும், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக அரசு NRC.NPR. தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்கிற ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு தன்னார்வத்துடன் தொடர்ந்து உணவு உள்ளிட்ட தேவைகளை வழங்கி வருபவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் 7.3.2020 அன்று கோவையில் நடந்த முழு அடைப்பின் போது நோயாளிகள், வெளியூர் பயணிகள், உள்ளிட்ட ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கிய கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அமைப்பின் நிர்வாகி தாக்கப்பட்டவுடன் 10 நிமிடத்தில் அதை இஸ்லாமியர்கள்தான் செய்தார்கள்
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
விழிப்புணர்வுக்காக குறும் படம் எடுத்த மாணவர்கள்.! முதமி முன் அன்சாரி MLA வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!
இளம் தலைமுறையினரிடம் சமூக அக்கறைகள் அதிகரித்து வருவதற்கு கீழ்கண்ட நிகழ்வு ஒரு உதாரணமாகும். தோப்புத்துறையை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் இணைந்து "மதம்". என்ற பெயரில் நல்லிணக்கம் மிக்க ஒரு குறும் படத்தையும், 'ஹெல்மெட்' என்ற பெயரில் விபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களை எடுத்துள்ளனர். தோப்புதுறையைச் சேர்ந்த இளம் மாணவர்கள் Nishanth வினோத் ராஜ், ரிஸ்வான், துரை ராஜன், ஜெய பாலா, மீனாட்சி சுந்தரம், சுதர்ஷன், குமார், ராம், செல்வ குமார், அஜித், மாதவன் ஆகியோர் இணைந்து குறும்படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்த இப்படத்திற்கு Film Free Way என்ற youtube நிறுவனம் பதக்கங்களை அனுப்பி சிறப்பித்துள்ளது. நேற்று இந்த மாணவர்கள் மொத்தமாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இளம் வயதில் சமூக பொறுப்புணர்வுடன் குறும்படங்கள் எடுத்து சாதித்ததற்கு தன் வாழ்த்துக்களை கூறினார். இது போல விழிப்புணர்வுள்ள மனிதநேயமுள்ள கலை படைப்புகளை தொடர்ந்து செய்யுமாறும் இதற்கு எல்லா ஒத்துழைப்புகளையும் தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்தலிலும் கவனம் செலுத்துமாறும்
புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!
டிச.18, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சி.இப்ராஹீம் ஷா கண்டன உரையாற்றிட பேரா.மைதீன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து நவாஸ்கனி MP, திருச்சி.வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, மாநகர், பகுதி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கு கொண்டனர். ஜமாத்தார்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் அவர்களை அணிவகுத்து நிற்க தேவையான உதவிகளை மஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேற்கொண்டனர். ஒழுங்குபடுத்துவதற்கு உதவியதற்காக மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காவல்துறை உயரதிகாரிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பல்வேறு சமூகத்தவர்களும் இணைந்து வெள்ளமென திரண்டிருந்த இக்கூட்டம் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது என்றால் மிகையாகாது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்
புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இந்தியாவின் வீதிகளையாராலும் கட்டுப்படுத்தமுடியாது!
ஈழத் தமிழர்களை, அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களை, நேபாள கிறிஸ்தவர்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, #விழுப்புரத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களை இணைத்து ஜமாத்துல் உலமா ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசும் போது, 'இந்த மூன்று கோரிக்கைகளை இச்சட்டத்தில் இணைக்காவிட்டால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது' என்றும், 'இந்தியாவின் வீதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது' என்றும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக மக்களும் பங்கேற்று ஆதரவளித்தனர். பொதுச் செயலாளருடன், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் செளக்கத், மாவட்ட துணைச் செயலாளர் பைரோஸ், செய்யது உசேன், விழுப்புரம் நகர செயலாளர் ஜின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக சார்பில் அடையாள எதிர்ப்பு முழக்௧ம்!
டிச.13, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடையாள முழக்கங்கள் மஜக மாவட்ட செயலாளர் முனைவர். முபாரக் அலி தலைமையில் இன்று (13/12/19) அறந்தாங்கி காமராசர் சிலை (டவுன் பள்ளிவாசல்) அருகில் நடைபெற்றது. இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் எதிப்பு முழக்கத்தை முன்மொழிந்து தொடங்கி வைத்தார். கலந்து கொண்டவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க வேண்டாம். அண்டை நாட்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழநாட்டு தமிழர்களையும் சேர்த்து குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டும் என்று முழக்௧ங்களை எழுப்பினர். இதில் கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, நகர துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், இளைஞர் அணிச் செயலாளர் அஹமது ரியாஸ், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் சாகுல் அமீது, மாணவர் அணிச் செயலாளர் கலந்தர் மைதீன், ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி உள்ளீட்ட பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். நகர செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்புரையாற்ற மாவட்ட துணைச் செயலாளர் செய்யது