மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வழக்கம் போல் செயல்பட்டு கட்டண வசூல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும். கொரணா நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பும், பீதியும் குறையாத நிலையில் மக்கள் மிகப் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகள் செயல்படும் என அறிவித்திருப்பது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும். https://m.facebook.com/story.php?story_fbid=2406932309406530&id=700424783390633 இதன் மூலம் அவசரப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவது ஒரு புறமெனில், சரக்குப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடும். அந்த வகையில் இது மக்களின் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதலாகும். மத்திய அரசு இதுவரை மக்களுக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யாத நிலையில், அவர்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே பெரிய உதவியாகும். இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இப்போதைய நிலையில் அவற்றை செயல்பட வைப்பது மக்களிடையே மேலும் கடும் அதிருப்தியைத் தான் உருவாக்கும். எனவே, மத்திய அரசு இம்முடிவை திரும்ப
Tag: M.தமிமுன் அன்சாரி
பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரோனோ வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். நாடும், மக்களும் இத்துயரத்திலிருந்து விரைந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான விருப்பமாகும். அரசியல், சாதி, மதம், இனம், வட்டாரம் என பேதங்களை கடந்து மக்கள் யாவரும் ஒரே மனநிலையில் அணிவகுத்து நிற்கிறார்கள். மக்கள் சோதனையான ஒரு சூழலில் தவிக்கும் போது, நிவாரணம் மற்றும் நிதி உதவிகளில் மத்திய அரசு இறுக்கமான போக்குடன் இருப்பது நல்லதல்ல. ஆலை தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், சினிமா துறை தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள், சிறு கடை ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டிகள், சுமை தூக்குவோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், கொரியர் போன்ற சேவை பிரிவில் பணியாற்றியோர் என ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்த அனைவரும் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். பசியும், வறுமையும் கெளரவ தற்கொலைகளையும், பட்டினி சாவுகளையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மத்திய அரசு பொறுப்புணர்வுடன் அக்கறை காட்ட வேண்டும். GST உள்ளிட்ட வரிகளை பெருமளவில் சேமித்து வைத்திருக்கும் மத்திய அரசு
ஊரடங்கு நீட்டிப்புக்கு முன்பாக உரியமுன் ஏற்பாடுகளில் மாநில அரசு கவனம் செலுத்தவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!
கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக பல இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் தமிழகத்திற்குள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல , 48 மணி நேரம் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கொரணா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்கள், அது இல்லை (நெகட்டிவ்) என தெரிய வந்ததும், அவர்கள் விரைந்தது வீடு திரும்பி, உரிய பின் தொடர் கிசிச்சைகளை வீடுகளிலேயே தனிமையில் தங்கி மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது போல் 19 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்புக்குரியது. அத்துடன் கிரிமிநாசினி, சோப்பு, கையுறை ,முகக் கவசம் ஆகியவற்றையும் தமிழக அரசு வீடு தோறும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும்,இரண்டாம் கட்ட நிவாரணமாக ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ டீன் ஆகியோரைசந்தித்த மஜக மாநில துணைச் செயலாளர்..!
சிவகங்கை.ஏப்ரல்.10., சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா தொற்று இல்லை என்று ஆய்வு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரும் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் உள்ளனர். இவர்களை அரசு உடனே விடுவிக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் அவர்களையும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் சந்தித்தார். இரண்டு அல்லது மூன்று தினங்களில் மூன்று குழுக்களாகப் பிரித்து அவர்களை விடுவிக்க இருக்கின்றோம் என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்தார். மாநில துணைச் செயலாளருடன் மஜக சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், இடைக்காட்டூர் சதாம் உசேன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், கான்சா சிராஜூதீன், முஸ்தபா, முத்து முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 10-04-2020
கிருமி நாசினி சுரங்கம் முதமிமுன்அன்சாரி MLA பார்வையிட்டார்!
ஏப்ரல் 10, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிக்கும் தற்காலிக செயற்கை சுரங்கம் வழியே மு.தமிமுன் அன்சாரி MLA சென்று அதன் செயல்பாடுகளை சோதித்தறிந்தார். இது அவசர கிசிச்சை பெறுவோரின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.