75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கோணுழாம்பள்ளத்தில், தேசிய கொடி ஏற்றப்பட்டது. கோணுழாம்பள்ளம் நவாஸ்தீன் (ராஜா) தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உறுதி மொழியை முழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், துணை செயலாளர் சையது இப்ராஹிம், ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா உள்பட திரளான மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
Tag: MJK Party
75வது சுதந்திர தின விழா! நாச்சிகுளத்தில் மஜக மாநில செயலாளர் தாஜூதீன் பங்கேற்பு!
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக நாச்சிகுளம் ஜும்மா பள்ளி இமாம் அப்துல் காதர் அவர்கள் தேசியக் கொடியின் வரலாறு குறித்து உரை நிகழ்த்தினார். மஜகவின் பஹ்ரைன் மண்டல ஆலோசகர் ஜான்முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜாபானு அன்வர் அலி, Ex ஊராட்சி மன்ற தலைவர் திரு.வைத்தியநாதன், Ex ஊராட்சிமன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, 8வது வார்டு உறுப்பினர் ராயல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக கிளை பொறுப்பாளர் நாச்சிகுளம் ரசீது தலைமையில் கிளை துணை செயலாளர் இம்தியாஸ், சீமான், ஹாரீஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
தத்துவாஞ்சேரியில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தத்துவாஞ்சேரியில், தேசிய கொடி ஏற்றப்பட்டது. தத்துவாஞ்சேரி ராஷித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உறுதி மொழியை முழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் சையது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது சாஜித், ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா உள்பட திரளான மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
நாகர்கோவிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோட்டாறு பகுதியில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹாபீஸ், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இஸ்லாமிய கலாசார பேரவை மாவட்ட செயலாளர் மிஸ்பா ஆலிம் அவர்கள் சுதந்திர தின உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், அமீர்கான், மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப், அலி மாநகர துணை செயலாளர் மாஹீன், மற்றும் மாநகர துணை செயலாளர் பைசல், நிர்வாகிகள் மாஜித் , அசீம், அமீன், வேல்முருகன், மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கன்னியாகுமரி_மாவட்டம் 15.08.2021
திருப்பனந்தாளில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக திருப்பனந்தாளில், தேசிய கொடி ஏற்றப்பட்டது. திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை ஆசாத் அலி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா உறுதி மொழியை முழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் சையது இப்ராஹிம் உள்பட திரளான மஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.