சென்னை.பிப்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் அவர்கள் பங்கேற்று இந்தியாவில் நடைபெறும் தொடர் வன்முறைகளுக்கு காரணமானவர்களை பட்டியலிட்டு, கலவரக்காரர்களை இயக்குபவர்கள் யார் என்று உரையாற்றினார். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜியா, மாவட்டப் பொருளாளர் ரரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர் கடாஃபி, மாவட்ட துணைச்செயலாளர் அஸாருதீன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் வில்லிவாக்கம் சாகுல், பொருப்புக்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுப_அணி #MJK_IT_WING #தென்சென்னைமாவட்டம் 09-03-2020
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
வண்ணாரப் பேட்டையில் 25 நாட்களாக தொடர்ந்து நடைப் பெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணைப் பொதுச் செயலாளர் ஜேஎஸ்ரிஃபாயி உணர்வு பூர்வமான உரை…!
சென்னை.பிப்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம், 25 நாட்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. நேற்றைய போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாய் ரஷாதி அவர்கள் கலந்துக்கொண்டு சுதந்திரப்போராட்டம் முதல் நாட்டில் சமத்துவம் வேண்டி நாடிய சிறுபான்மை தலைவர்களின் தியாகங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து டெல்லியில் நடந்த வன்முறையை விளக்கி ஷாஹின் பாக் (காத்திருப்பு) போராட்ட களத்தில் பெண்களின் தியாகங்களைப் பற்றி பேசி தொடர் போராட்டத்தின் அடுத்த கட்ட தேவையை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார். இணை பொதுச்செயலாளர் உடன் மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், வடசென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் கதிர் உசேன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வடசென்னைமாவட்டம் 09-03-2020
கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில்! மஜக கொள்கை விளக்க அணிமாநில செயலாளர் கோவை நாசர் அவர்கள் பங்கேற்பு!
கோவை: மார்ச்.10., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். உடன் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 09-03-2020
மழையைப் பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்! டெல்லி ஷாஹின் பாக்கை நினைவூட்டும் தென்காசி தொடர் போராட்டக்களத்தில்! மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை!
மார்ச்.10, தென்காசியில் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். களத்தில் கொட்டும் மழையை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் குடைகளை பிடித்தவாறு திரண்டிருந்தனர். இது கடும் குளிரிலும் போராடும் டெல்லி ஷாஹின்பாக் போராட்ட களத்தை நினைவுப்படுத்தியது. இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் M. பீர்மைதின், பொருளாளர் முகமது இப்ராஹிம், பேச்சாளர் வாவை இனையத்துல்லா, ஒன்றிய செயலாளர் அன்வர், துணைச் செயலாளர் சபிக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சங்கை பீர்மைதின், சங்கரன்கோவில் நகர செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் இத்ரீஸ், அச்சன்புதூர் நகர செயலாளர் முஹம்மது நாசர், பொருளாளர் கமாலுதீன், சங்கரன்கோவில், வடகரை, புளியங்குடி கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தென்காசி_மாவட்டம். 09/03/2020
ஹிட்லரை வீழ்த்திய கம்யூனிஸ்ட்டுகள் தான் மோடியையும் வீழ்த்த வேண்டும்..! விழுப்புரத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு…!
மார்ச் 09, விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கெதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் D.ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... இந்திய ஜனநாயகம் இன்று புற்றுநோய் அரிப்புக்கு ஆளானதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இல்லாமல் போனது தான். கம்யூனிஸ்ட்டுகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில் வலிமையாக இருந்திருந்தால் இந்தியாவின் வரலாறு மாறி போயிருக்கும். அவர்கள் கடலோர மாநிலங்களில் ஓரளவு வலிமையாக இருப்பதால்தான், இந்திய நாடளுமன்றத்திலும், பல மாநில சட்டமன்றங்களிலும் ஜனநாயகம் உயிர் துடிப்போடு இருக்கிறது. அதற்கு கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பங்களிப்புகள்தான் காரணம் என்பதை நாடு நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது. இன்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாடே போராடுகிறது. இதில் எல்லா ஜனநாயக சக்திகளும் களமாட வேண்டிய தருணம் இது. நாட்டை ஃபாஸிஸ்ட்டுகளிடமிருந்து மீட்க வேண்டிய கடமை