மார்ச்.14, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர், பேராவூரணி சலாம், முத்துப்பேட்டை நகர செயலாளர் பால்கார மைதீன், நகர பொருளாளர் பஷீர், அதிரை ஹக், யாசீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING | #முத்துப்பேட்டை_பேரூர். #திருவாரூர்_மாவட்டம். 13/03/2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
பண்ருட்டி தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை!
மார்ச் 14, கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், ஒன்றிய செயலாளர் ரஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 13/03/2020
கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்…! மஜக துணைபொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!
சென்னை.மார்ச்.14., தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மக்கா பள்ளிவாசலில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதீன் பாகவி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மஜக துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மஜக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர் தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 14-03-2020
சென்னையில் முதல் கோடைக்கால தண்ணீர்பந்தல்..! மஜக பொதுச் செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்.!
சென்னை.மார்ச்.13., மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புதுப்பேட்டையில் #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் முதல் கோடைகால தண்ணீர் பந்தல் துவங்கப்பட்டது. சென்னையில் இதுவே இவ்வாண்டிற்காக முதல் முயற்சி என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சென்ற 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானங்கள் கொடுத்து மஜக பொதுச்செயலாளர் #முதமிமுன்அன்சாரி MLA., துவக்கி வைத்தார். பேருந்து, ஆட்டோ, தட்டு ரிக் ஷா, இரு சக்கர வாகனங்களில் சென்றோருக்கும் விநியோகம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சலீம், MJTS அப்துல் கரீம்,சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் தாஜ், MJVS T.M.யூசுப், கிளை நிர்வாகிகள் R.பஷீர், குலாப் பாஷா, ஜப்பார், நிரோஷ் மீரான், சாகுல் ஹமீது, அசன் அலி, ஷராவ(F)த், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளாள கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 13-03-2020
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனைக்கூட்டம், மஜக_பங்கேற்பு…!
சென்னை.மார்ச்.13., தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன் ஆகியோர் பங்கேற்றனர். NPR குறித்து அரசு தெளிவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மார்ச்-17 காலை 10மணி முதல் 18-ம் தேதி காலை 10மணி வரை ஒரு நாள் தர்ணா போராட்டம் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் நடத்தப்படும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 13-03-2020