ஜனவரி 03, இராமநாதபுரத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக சார்பில் மாவட்ட செயலாளர் இலியால் பங்கேற்று கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி அவர்கள் கறுப்பு சட்டங்களை கடுமையாக சாடி தனக்கே உரிய பாணியில் பேசினார். அது போல் நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசும் போது மோடி - அமித் ஷா கூட்டணியின் வஞ்சகங்களை தோலுரித்தார். இதில் முக்குலத்து புலிப் படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பங்கேற்று, 45 நிமிடங்கள் அனல் பறக்க பேசினார். கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்றவர், இப்போராட்டத்திற்கு புலிப் படை என்றும் துணை நிற்கும் என்றதும் கூட்டம் ஆராவரித்தது. பசும்பொன் தேவர் உங்களோடு உறவு பாராட்டியது போல நானும் உங்களோடு நிற்பேன் என்றதும் கூட்டம் முழக்கங்களை எழுப்பி அதை உற்சாகமாக வரவேற்றது. இக்கூட்டத்திற்கு தேவர் சமுதாய மக்கள் திரண்டு வந்து வலு சேர்ந்தனர். முக்குலத்தோர் புலிப் படையினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இந்நிகழ்வில் நவாஸ் கனி MP, இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம், உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இது பல இன மக்களையும், பல தரப்பினரையும்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
அரசியல் சட்டபாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் CAA வை எதிர்த்து துணைப் பொது செயலாளர் என்.ஏ.தைமிய்யா கண்டன உரை
சென்னை., ஜன.03 CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கின்றனர். இதனடிப்படையில், இன்று 03.01.2020 மதியம் 3.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அரசியல் சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு (CITIZEN'S CHENNAI PROTEST) சார்பில் ஐயா.நல்லக்கண்னு அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தோழர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP, SDPI தலைவர் நெல்லை முபாரக், தெஹ்லான் பாகவி, NTF பொதுச்செயலாளர் A.S அலாவுதீன், வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, திருமுருகன் காந்தி, தியாகு, சுந்தரவள்ளி, INTJ பாக்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு கண்டன
சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில்_CAAவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! மஜக பங்கேற்பு
சென்னை.ஜனவரி.04.., CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதி வழியில் பேரணிகள் & ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களை அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மாணவ அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், நேற்று 03.01.2020 மதியம் 2.30 மணியளவில் சென்னை ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் K.அமானுல்லா கான் அவர்களின் தலைமையில் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். மேலும் இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது, மாநில இளைஞரணிச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாணவர் இந்தியா மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, வர்த்தக அணி செயலாளர் புதுப்பேட்டை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் MP, திமுக சட்டமன்ற உறுப்பினர் J.அன்பழகன், காங்கிரஸ்
ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி!
ஜன.04, தஞ்சாவூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரா.காதர் மைதீன், தோழர் பெ.மணியரசன், பழனிமாணிக்கம் MP, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா, தோழர்.ஜீவகுமார், துரை.சந்திரசேகரன் MLA, நீலமேகம் MLA, தோழர். P செந்தில் குமார், தோழர்.சொக்கா.ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பங்கேற்று பேசியதாவது:- 'CAA சட்டத்தின் வழியாக யாருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என நாம் கூறவில்லை. அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக யார் வந்தாலும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்கிறோம். இதில் ஈழத் தமிழர்களை புறக்கணித்தது என்ன நியாயம்? என்கிறோம். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? மூன்று தலைமுறைகளாக அகதிகளாக இங்கே இருக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கலாமா? பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களையும், சீக்கியர்களையும் ஏற்கும் நீங்கள் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கலாமா? அவர்களையும் இதில் இணைத்து குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். நேபாளத்திலும், பூடானிலும் மத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் கிறிஸ்தவர்களையும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வசிக்கும், அதே போல இந்திய - பங்களாதேஷ் எல்லையில் வசிக்கும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் அகதிகளாக வந்தால் அதை ஏற்று குடியுரிமை வழங்குங்கள் என்கிறோம். இதை ஏற்க மாட்டோம் என்பதால்
திருச்சியில் மஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை காவிரியாற்றில் புதைக்கும் நூதன போராட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக குடியுரிமை சட்டத்தை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா கண்டன முழக்கஙகளை எழுப்பி துவக்கி வைத்தார். தொடர்ந்து போராட்ட நகர்வுகளை ஒழுங்குப்படுத்தினார். குடியுரிமை சட்ட நகல்களை வைக்கோலால் தயார் செய்யப்பட்ட பொம்மையின் உள் வைத்து தூக்கி சென்று புதைக்க முற்படுகையில் அதனை காவல்துறையினர் தடுத்து பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இதில், பேரா.மைதீன், மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சம்சுதீன், தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் ஜமால், NTF மாவட்ட செயலாளர் மற்றும் அரியமங்கலம் பகுதி இளைஞர்கள் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜகவின் நிர்வாகிகள் பக்கீர் மைதீன், தர்கா பாரூக், அந்தோணி, கிருஷ்ண மூர்த்தி, புரோஸ்கான், தென்னூர் சதாம், அப்பாஸ், கமால், முகமது பீர்ஷா, அப்துல் காதர் மற்றும் மேலும் பல்வேறு கட்ட நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கல்லூரி மாணவர்கள் என திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். பாலக்கரையின் மையப்பகுதியில் நடைபெற்ற இப்போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்.