திருச்சியில் மஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை காவிரியாற்றில் புதைக்கும் நூதன போராட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக குடியுரிமை சட்டத்தை காவிரி ஆற்றில் புதைக்கும் போராட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா கண்டன முழக்கஙகளை எழுப்பி துவக்கி வைத்தார். தொடர்ந்து போராட்ட நகர்வுகளை ஒழுங்குப்படுத்தினார்.

குடியுரிமை சட்ட நகல்களை வைக்கோலால் தயார் செய்யப்பட்ட பொம்மையின் உள் வைத்து தூக்கி சென்று புதைக்க முற்படுகையில் அதனை காவல்துறையினர் தடுத்து பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.

இதில், பேரா.மைதீன், மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சம்சுதீன், தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்டத்தலைவர் ஜமால், NTF மாவட்ட செயலாளர் மற்றும் அரியமங்கலம் பகுதி இளைஞர்கள் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

மஜகவின் நிர்வாகிகள் பக்கீர் மைதீன், தர்கா பாரூக், அந்தோணி, கிருஷ்ண மூர்த்தி, புரோஸ்கான், தென்னூர் சதாம், அப்பாஸ், கமால், முகமது பீர்ஷா, அப்துல் காதர் மற்றும் மேலும் பல்வேறு கட்ட நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கல்லூரி மாணவர்கள் என திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாலக்கரையின் மையப்பகுதியில் நடைபெற்ற இப்போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.