நள்ளிரவில் உணர்ச்சிமிகு போராட்டம்.! பதட்டத்தில் தவித்த கவர்னர் மாளிகை..!

சென்னை.ஜனவரி.1..,

2020 ஆம் ஆண்டு தொடங்கிய நள்ளிரவு அது இந்தியாவின் போராட்டத்திற்கும், மாற்றத்திற்குமான ஆண்டாக மலர்ந்துள்ளது.

அந்த குளிர் மிகு இரவில் 11:45-க்கெல்லாம் நூற்றுக்கணக்கானோர் கூடினர்.

சரியாக 12 மணிக்கு பறை முழக்கமிட்டு மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆண்களும், பெண்களும் முழக்கமிட்டனர்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தோழர் தியாகு, சுயராஜ்.பாலகிருஷ்ணன், கெளஸ், தவஸி, KM.ஷெரீப், குமரன், இக்பால், பாத்திமா முஸப்பர் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்களும் முழக்கங்களை எழுப்பினர்.

ஏராளமான படைப்பாளிகளும் திரண்டு வந்து, தரையில் அமர்ந்து ஆர்ப்பரித்தனர்.

அகில இந்திய அளவில் ஊடகங்கள் இவற்றை நேரலை செய்தன.

கவர்னர் மாளிகை நோக்கி என அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், கவர்னர் மாளிகையை சுற்றிலும் சுமார் 1500 போலிசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்

சைதைப்பேட்டை பனகல் மாளிகை அருகே இப்போராட்டம் நடந்ததால், அண்ணாசாலையில் பலத்த பாதுகாப்பு வளையம் கட்டப்பட்டிருந்தது.

அமைதியாக கூடிய சமூக செயல்பாட்டாளர்களும், படைப்பாளிகளும், மஜக நிர்வாகிகளும் தங்கள் நள்ளிரவு போர் குரலை எழுப்பி விட்டு அமைதியாக கலைந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
31-12-2019

https://m.facebook.com/story.php?story_fbid=2190308641068899&id=700424783390633