NTF மாநில நிர்வாகிகள் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுடன் சந்திப்பு

சென்னை.ஜன.1..,

நேற்று (31/12/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநிலப் பொருளாளர் அதிரை ஜாஹிர், மாநிலச் செயலாளர்கள் தாஜுதீன், கமருதீன், மாநில பிரதிநிதி அபுகிதர் மண்ணடி தவ்ஹீத் பேரவை ஷாநவாஸ் ஆகியோர் வருகை புரிந்தனர்.

மஜக தலைமையகத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., அவர்களை நேரில் சந்தித்த NTF நிர்வாகிகள், தற்போது இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்காமல் உள்ளன.

இச்சூழ்நிலையில் தமிழகத்தில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து, CAA, NRC, NPR க்கு எதிராக அடுத்த கட்ட போராட்ட வியூகம் அமைக்க ஒன்று கூடுவதற்காக NTF நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுத்த கடிதத்தை மஜக பொருளாளர் அவர்களிடம் வழங்கினார்கள்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
31.12.2019

https://m.facebook.com/story.php?story_fbid=2189996184433478&id=700424783390633