குடியுரிமை இருந்தால்தான் வாழ்வுரிமை, மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!

ஜன.01,
அதிராம்பட்டிணத்தில்,
அஹமது அப்சல் – நபீலா,
ஷபி அஹமது- ரூமைஜா,
முஹம்மது பரீத்- ஆயிசா ஆகியோரின் திருமணம் அதிரை செக்கடி பள்ளிவாசலில் நடைப்பெற்றது.

அதில் பங்கேற்று மஜக பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக பேசினார். உபி மாநிலத்தில் அறவழியில் போராடிய மக்களின் மீது துப்பாகி சூடு நடத்தி 21 உயிர்களை பறித்த ஆதித்யாவை கண்டித்து பேசினார். ஒரு சன்னியாசிக்கு மனித உயிர்களின் மதிப்பு தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை இருந்தால் தான் வாழ்வுரிமை கிடைக்கும் எனவே அமைதி வழி போராட்டங்கள் மூலமே குடியுரிமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், MKP ஆஸ்திரேலியா மண்டல செயலாளர் அதிரை சர்புதீன், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் து.செயலாளர் அரபாஃத், ஜப்பார், வக்கீல் நிஜாம், MJTS தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வம், ஹக், இப்ராஹிம், ஹாஜிஅலி உள்ளிட்ட நிர்வாகிகளும் மனிதநேய சொந்தங்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பிறகு MJTS கொடியை அதிரை கடைத்தெருவில் மஜக பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.