இஸ்லாமிய இயக்கங்கள் சிறுபான்மைகட்சிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்…!
ஜனவரி.1, சென்னை அண்ணாசாலை மக்கா பள்ளிவாசலில் NRC, NCR, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த கட்ட போராட்ட வடிவங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரசீது மற்றும் துணை பொதுச்செயலாளர் தைமிய்யா கலந்துக்கொண்டனர்.
மஜக மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
CAA, NRC, NPR உள்ளிட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்துவது, இச்சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைத்து செயல்படுவது, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இச்சட்டங்களை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என்று கோரிக்கை அளிப்பது, NPR சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
01-01-2020
https://m.facebook.com/story.php?story_fbid=2190989064334190&id=700424783390633