கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாகையில் பிரம்மாண்ட பேரணி! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

குடியுரிமை போராட்டம்
ஜனவரி 01

மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக, நாகப்பட்டினத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டியிக்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி எழுச்சியோடு நடைப்பெற்றது.

பேரணி 4 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, தேசிய கீதத்தோடு தொடங்கியது. பேரணியில் 650 அடி நீள இந்திய தேசிய கொடியை சுமந்து இளைஞர்கர்கள் முழக்கமிட்டவாறு வந்தனர்.

பெண்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தி, சாரை – சாரையாக அணிவகுத்து வந்தனர். குழந்தைகளும் தேசிய கொடிகளை கையில் ஏந்தி திரண்டனர்.

பேரணி ஒரு முனையை கடக்க 45 நிமிடங்கள் ஆனது. நீயூஸ் 18 தொலைக்காட்சி பேரணியை நேரலை செய்ய, பிற ஊடகங்கள் உயரமான கட்டிடங்களில் இருந்தவாரு ஒலிப்பதிவு செய்தனர்.

பேரணியில் நாகையை சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் தன்னார்வத்தோடு கலந்துக் கொண்டது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது.

பேரணி புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், பேரணி ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் அன்வரி அவர்கள் தொடக்கஉறையாற்றினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது “பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடுவதை சுட்டிக்காட்டி பேசினார். மோடியும், அமித்ஷாவும் மக்களை மதத்தால் பிரிக்க நினைத்தனர். ஆனால் மக்கள் இந்தியர்களாக இணைந்து போராடுகிறார்கள் என்றார். இந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஓத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றை முன்னெடுப்போம் என்றதும் கூட்டம் ஆராவரித்தது.

கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் MP, கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் மதிவானன் உட்பட பல்வேறு ஜமாத்துகள், கட்சிகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் சமூக நீதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவுரி திடல் நிரம்பி வழிந்து, வெளியேயும் மக்கள் கூடியிருந்தது குறிப்படத்தக்கது.

ஆம். கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் போர் பரவுகிறது.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_தெற்கு_மாவட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2191139624319134&id=700424783390633