கடலூர்.ஜனவரி.5.., இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன மாநாடு நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். இன்று டெல்லியில் JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்தார். நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்கள், நாள் தோறும் வீரியம் பெறுவதாக கூறியவர், அரசப் படைகளாலும், அடக்கு முறைகளாலும் இவற்றை ஒடுக்க முடியாது என்றார். மக்கள் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றவர், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஐ.நா.வின் மேற்பார்வையில் இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். நீதி மறுக்கப்பட்டால் இப்பிரச்சனையை எங்கள் இந்து சமுதாய அறிவுஜீவிகள் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்து செல்வார்கள் என்றும் எச்சரித்தார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பிரம்மாண்ட மக்கள் திரள் கூடி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தொகுதி மக்கள் மட்டுமே இணைந்து இவ்வளவு பெரிய எழுச்சியை திரட்டி உள்ளனர். ஜனநாயக சக்திகள், முற்போக்கு கட்சிகள்,
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
கருப்புசட்டங்களுக்கு எதிராக பெரும்பாக்கம் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.., மஜக பங்கேற்பு..!
செங்கை.ஜனவரி.04.., CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக அனைத்து கட்சி, இயக்கங்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து இந்தியா முழுவதிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஜமாத் சார்பாக OMR சாலையில் நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அப்துல்லாஹ் உட்பட மஜக தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பரித்தனர். தகவல்;- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கை_வடக்கு 04-01-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2197293233703773&id=700424783390633
நெல்லைகண்ணன் பேசியது தவறெனில் மற்றவர்கள் பேசியது சரியா? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி..!
ஜனவரி.3.., இன்று தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஜமாத்தினர் இதற்கு ஆதரவு அளித்து திரளாக பங்கேற்றனர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசியதாவது.. பல கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இருக்கும்போது, நாங்கள் வாழ்வுரிமைக்கான போராட்ட களத்தை நடத்தி வருகிறோம். அதில் கவனம் செலுத்தியதை விட இதில் தான் தீவிரமாக இயங்கி வருகிறோம். இது நாட்டை காக்கும் அறப்போராட்டம். இது எங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நாளுக்கு நாள் போராட்ட களம் வீரியமடைகிறது. மக்கள் தன்னெழுச்சியாக திரள்கிறார்கள். மத நல்லிணக்கத்துடன் கூடிய இன்னொரு சுதந்திர போராட்டமாக இது மாறியுள்ளது. இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெறும் வரை ஓய மாட்டோம். இவை தொடக்கம் தான். இன்னும் முழுமையான போராட்டம் தொடங்கவில்லை. வட இந்திய ஊடகங்களிடம் போராட்ட காட்சிகளை, செய்திகளை முக்கியப்படுத்த வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளதாம். இருட்டடிப்புகளை தாண்டி செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களை மூடி மறைக்க முடியாது. இந்த போராட்டங்களை சில மூளை வீங்கிகள் கொச்சைப்படுத்தி, தங் களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். போராட்டம் மக்களை நோக்கி செல்கிறது. மக்கள்
காங்கிரஸ் கொண்டு வந்த NPR சட்டமும் பாஜக கொண்டு வந்த சட்டமும் ஒன்றா? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி.
ஜனவரி.03, இன்று திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதி அளவிளான கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் கண்டன உரையாற்றினார். அப்போது பேசியதாவது .. NRC சட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு என்றதும் கொல்லைப்புறம் வழியாக அதன் கேள்விகளை NPR சட்டம் மூலம் கொண்டு வர மத்திய அரசு வஞ்சகமாக திட்டமிடுகிறது. வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை வரவேற்கிறோம். ஆனால் NPR சட்டம் என்பது இதிலிருந்து மாறுபட்டது. அது வேறு இது வேறு. NPR சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று கூறி தப்பிக்க பார்க்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா? காங்கிரஸ் கொண்டு வந்த NPR ல் 15 கேள்விகள் மட்டுமே இருந்தன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த NPR சட்டத்தில் கூடுதலாக 6 கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 6 கேள்விகள் என்பது அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்ட NRC சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளாகும். பாட்டன், பூட்டனின் பிறந்த ஆவணத்தை எங்கு தேடுவது? 1970 களுக்கு பின்னால் தானே, பிறந்த தேதி ஆவணங்கள் முறையாக பதிவாகின. அதற்கு
கானத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் CAAஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!! : எஸ்எஸ்ஹாரூன் ரசீது கண்டனஉரை
கானத்துர்.ஜனவரி.03.., பாஜக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் அமைதி வழியில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் இயக்கங்கள், தமிழ்தேசிய அமைப்புகள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (03-01 2020) செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது M.Com., கலந்து கொண்டு CAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சு.க.விடுதலைச் செழியன், விசிக மாவட்டச் செயலாளர் சு.ரா.ராஜ்குமார், திமுக கானத்தூர் ஊராட்சி செயலாளர் M.சௌந்திரபாண்டியன், SDPI மாநில பேச்சாளர் கிண்டி அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பள்ளியின் மெளலான A சிராஜுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மஜக மாவட்டப் பொறுப்புக்குழு தலைவர் கல்பாக்கம் ரஷீத், மாவட்டப் பொறுப்பு குழு உறுப்பினர்கள் சர்தார், கானத்துர் தீன், கானத்துர்