ஜனவரி-19, மயிலாடுதுறையில், குடியுரிமை சட்டங்களுக்கெதிரான தொடர் போராட்டங்களின் நேற்று பெரும் திரளாக மக்கள் எழுச்சியோடு பங்கேற்ற பேரணியை கூட்டமைப்பு சார்பில் இரயில்வே மேம்பாலத்திலிருந்து ஹஜ்ரத் N.அப்துல் காதர் தாவூதி தொடங்கி வைக்க முடிவில் சின்னகடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக-வின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்ஷா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் N.அப்துல் ஹக்கீம் சிராஜி திருமறையுடன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். மேலும், மயிலாடுதுறை MP இராமலிங்கம், எழுத்தாளர் வே.மதிமாறன் உள்ளிட்ட பல்வேறு இயக்க, கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டன உரை நிகழ்த்திட மயிலாடுதுறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நீண்ட தேசிய கொடியோடு ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கில் மக்கள் இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு முன் பேரணி வந்த போது பேரணியில் பங்கேற்ற பெண்கள், சிறுவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கருப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டத்திற்கெதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். மஜக நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான்,
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை சட்ட அபாயங்களை விளக்கிட அனைத்து மக்களையும் சந்திப்போம்
தஞ்சை.ஜனவரி.17.., இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக எழுச்சி மாநாடு நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பனியிலும் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர். மாநாட்டில் கலைக்குழுவின் முழக்கங்களை ஆதரித்து, செல்போன் லைட்டின் வெளிச்சம் பாய்ச்சி மக்கள் தங்களிள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாலர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உ.பி.மாநில காவல்துறை, போராடிய மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறையை அரச பயங்கரவாதம் என்று சாடினார். இந்த கறுப்பு சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதை புரிய வைக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை என்றவர், இதை இந்துக்கள், கிறித்தவர்கள், தலித்துகளிடம் வீடு, வீடாக சென்று சந்தித்து விளக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வெகு மக்களையும் இதில் பங்கெடுக்க செய்ய வேண்டும் என்றும், ஏனெனில் இது இந்தியாவை பாதுகாக்க நடைபெறும், அமைதி வழியிலான இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றார். நாளை முதல் கிராமம், கிராமமாக வீதி, வீதியாக மக்களை சந்திக்க வேண்டும். அதுவே இப்போராட்டத்திற்கு இனி கூடுதல் வலு சேர்க்கும் என்றார். எமது ஜனநாயக கோரிக்கைகள் நிறைவேறும் வரை அமைதி வழி போராட்டம்
குடியுரிமைசட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற மாபெரும் பேரணி : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!!
ஜன.17., குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரை பகுதியில் அனைத்து ஜமாத்துகள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் கேரள சட்டமன்ற உறுப்பினர் பாபு,MLA,மற்றும் மார்க்க அறிஞர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். அவர்கள் பேசும் போது தமிழகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் வந்திருப்பதாகவும் அவர்களின் பொதுச் செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களின் பேச்சுக்களையும், அவரின் செயல்பாடுகளையும் தாங்கள் அறிந்து வருவதாகவும் தமிழக சட்டமன்றத்தில் அவரின் தனித்தன்மையான செயல்பாடுகள் குடியுரிமை சட்டத்திற்கெதிரான அவரின் போராட்ட வழிமுறைகள் அனைத்தையும் நாங்கள் அறிந்து வருகிறோம் என பாராட்டி பேசினர். மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். அவர்களுடன் மஜக மாவட்ட அணி நிர்வாகிள் காஜா,அன்வர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து முழக்கமிட்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம்
கூட்டமைப்பு சார்பாக கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!
சென்னை.ஜனவரி.17.., கறுப்பு சட்டங்களான CAA, NRC, NPR, போன்ற சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களாலும் முன்னெடுக்கபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை போரூர் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டார ஜமாத்துகள், அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பான போரூர் (சிக்னல்) பிரதான சாலையில் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தியும் கண்டன உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்.... மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் இந்தியாவில் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடைபெறும், அதன் தொடக்கம் தான் இப்போராட்டம். இங்கு கலந்து கொண்ட அனைவரும் இயக்கங்கள், கட்சிகளின் பேதமின்றி தேசிய கொடியை கையில் ஏந்தி வந்துள்ளனர் என்றும், இது ஆரம்பம் தான் நாங்கள் ஒரு போதும் போராட்டங்களில் இருந்து பின்வாங்க மாட்டோம், தொடர் போராட்டங்களால் சோர்வடையவும் மாட்டோம் என்று சூழுரைத்தார்.
பிப்01 போராட்டம் குறித்து வீடு வீடாக பிரச்சாரம்! மஜக கூட்டத்தில் தீர்மானம்!
திருமருகல்.ஜன.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆதலையூர், கரைப்பாக்கம், கேதாரிமங்களம், ஏனங்குடி கிளைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் முன்னிலையில் நடைப்பெற்றது. கறுப்பு சட்டங்களான CAA, NRC யை கண்டித்து எதிர்வரும் பிப்.01 தேதி ஏனங்குடியில் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெறவுள்ள பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு வீடுவீடாக சென்று சட்டங்களை குறித்து மக்களிடம் விளக்கி பெரும்பான்மையாக நபர்களை போராட்டத்தில் பங்கேற்க செய்வது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மஜக வேட்பாளருக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அன்வர்தீன், பகுருதீன், IT WING நிசாத், கிளை நிர்வாகிகள் பாவா, முத்து மரைக்கான், யாசின், சிராஜ், முத்து, சம்சு, ஜாசிம், அசார், அல்தான், நபிஸ், இம்தியாஸ், அஸ்லம், அக்ரம், ஆசிப் உள்ளிட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 15/01/2020