மாயூரம் வரலாற்று சிறப்புமிகு பேரணி ஆர்ப்பாட்டம்! நீதிமன்றத்திற்கு முன் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டு எதிர்ப்பு!!


ஜனவரி-19,
மயிலாடுதுறையில், குடியுரிமை சட்டங்களுக்கெதிரான தொடர் போராட்டங்களின் நேற்று பெரும் திரளாக மக்கள் எழுச்சியோடு பங்கேற்ற பேரணியை கூட்டமைப்பு சார்பில் இரயில்வே மேம்பாலத்திலிருந்து ஹஜ்ரத் N.அப்துல் காதர் தாவூதி தொடங்கி வைக்க முடிவில் சின்னகடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மஜக-வின் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்ஷா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் N.அப்துல் ஹக்கீம் சிராஜி திருமறையுடன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

மேலும், மயிலாடுதுறை MP இராமலிங்கம், எழுத்தாளர் வே.மதிமாறன் உள்ளிட்ட பல்வேறு இயக்க, கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டன உரை நிகழ்த்திட மயிலாடுதுறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நீண்ட தேசிய கொடியோடு ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கில் மக்கள் இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

நீதிமன்ற வளாகத்திற்கு முன் பேரணி வந்த போது பேரணியில் பங்கேற்ற பெண்கள், சிறுவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கருப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டத்திற்கெதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மஜக நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் நீடூர் ஜெகபர் அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் கூறைநாடு முனைவர் தீன், நீடுர் ஜெப்ருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைவடக்குமாவட்டம்.
18/01/2020