கூட்டமைப்பு சார்பாக கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!


சென்னை.ஜனவரி.17..,

கறுப்பு சட்டங்களான CAA, NRC, NPR, போன்ற சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்களை இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களாலும் முன்னெடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை போரூர் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டார ஜமாத்துகள், அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பான போரூர் (சிக்னல்) பிரதான சாலையில் நடைபெற்றது,

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தியும் கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில்…. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் இந்தியாவில் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடைபெறும், அதன் தொடக்கம் தான் இப்போராட்டம். இங்கு கலந்து கொண்ட அனைவரும் இயக்கங்கள், கட்சிகளின் பேதமின்றி தேசிய கொடியை கையில் ஏந்தி வந்துள்ளனர் என்றும், இது ஆரம்பம் தான் நாங்கள் ஒரு போதும் போராட்டங்களில் இருந்து பின்வாங்க மாட்டோம், தொடர் போராட்டங்களால் சோர்வடையவும் மாட்டோம் என்று சூழுரைத்தார்.

இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் MP. உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜமாத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

இப்போராட்டத்தில் முத்தாய்ப்பாக மேடையில் கோயில் நிர்வாகி, கிறிஸ்தவ பாதிரியார், ஜமாத் நிர்வாகி என்று மூவரும் அரவனைத்து ஒன்றாய் நின்று மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியது போராட்ட காரர்களை மேலும் உத்வேக படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் S.G.அப்சர் சையத், IKP மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மஜக-வின் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
17-01-2020